கொரோனா 3வது அலையை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.. பிரதமர் மோடி அறிவுறுத்தல்.!
கொரோனா வைரஸ் தொற்றின் 3வது அலையை எதிர்கொள்வதற்கு தயாராக இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவறுத்தியுள்ளார்.

By : Thangavelu
கொரோனா வைரஸ் தொற்றின் 3வது அலையை எதிர்கொள்வதற்கு தயாராக இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவறுத்தியுள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை அதிகமான பாதிப்பையும், உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியது. இதனால் தொற்று பரவலை தடுப்பதற்காக 18 வயதில் இருந்து அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணிகள் குறித்து முன்களப் பணியாளர்களுக்கு பயிற்சி விழா நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது உருமாறி புதிய சவால்களை அளித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க அனைவரும் தயாராக இருக்க வேண்டும் என்று பிரதமர் குறிப்பிட்டார். வைரஸ் தொற்று கண்டிப்பாக உருமாற வாய்ப்புகள் அதிகமாக உள்ளது எனக் கூறினார். அதனை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்றார்.
மேலும், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு ஏற்பட்டுள்ள பணிச்சுமையை குறைக்கின்ற வகையில், முதல் இரண்டு அலைகளில் கற்றுக்கொண்ட பாடங்களை வைத்து ஒரு லட்சம் முன்களப் பணியாளர்களை தயார்படுத்தி வருதாகவும் பிரதமர் கூறினார். அது மட்டுமின்றி ஜூன் 21ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
