Kathir News
Begin typing your search above and press return to search.

கொரோனாவால் மீண்டுவரும் ஆண்களுக்கு அனைத்து உறுப்பும் பாதிக்குமா.. ஆய்வு முடிவு என்ன சொல்கிறது.!

கொரோனா வைரஸ் விந்தணுக்களின் உற்பத்தி மற்றும் பாலியல் ஹார்மோன்களின் உருவாக்கத்தை பாதிக்கும். இது கொரோனா தொற்று என்றும் சொல்லிவிட முடியாது. கொரோனாவால் ஏற்படும் மனச்சோர்வு, மன அழுத்தங்களும் காரணமாக இருக்கலாம் எனவும் மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

கொரோனாவால் மீண்டுவரும் ஆண்களுக்கு அனைத்து உறுப்பும் பாதிக்குமா.. ஆய்வு முடிவு என்ன சொல்கிறது.!
X

ThangaveluBy : Thangavelu

  |  18 Jun 2021 3:58 PM IST

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அதில் இருந்து மீட்பதற்காக மருத்துவர்கள் இரவு, பகலாக போராடுகிறது. இதற்கு என்று பல்வேறு சிகிச்சை முறைகளை கையாண்டு, கொரோனாவை அழித்து பொதுமக்களை காப்பாற்றினாலும் உடலில் அது பல உறுப்புகளை சிதைத்துவிடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்தாலும், உடலில் எங்கு வேண்டுமானாலும் ரத்தம் உறைதலை ஏற்படுத்தலாம். இதனால் உடலில் கை, கால் போன்ற உறுப்புகளை இழக்கவும் நேரிடுகிறது. அதில் முதலாவது இதயம் நின்றுபோகலாம். இதனால் தொடர் மருத்துவ கண்காணிப்பு அவசியம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

கொரோனாவால் மீண்டவர்களுக்கு கருப்பு பூஞ்சை, வெள்ளை பூஞ்சை, மஞ்சள் பூஞ்சை என்று பல வகையறாக்கள் தொற்றிக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. அது போன்ற பூஞ்சைகள் கண்களை மிகவும் சேதப்படுத்தி உயிர்களை காவு வாங்கு செயலில் ஈடுபடுவதாக கண்டறியப்பட்டுள்ளது. தற்போது அதற்கான மருந்துகளை கண்டுப்பிடித்து சிகிச்சையும் அளித்து வருகின்றனர்.

இதனிடையே தற்போது ஒரு அதிர்ச்சியான தகவல் வெளிவருகிறது. அதில் ஆண்மை குறைபாட்டை ஏற்படுத்துவதும் தெரியவந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று ஆண்களின் விந்தணு செயல்பாட்டை சேதப்படுத்தியும், விந்தணுக்களின் எண்ணிக்கை குறைத்து விடுவதாக கூறப்படுகிறது. அதில் 50 சதவீதம் பாதிப்புகளையும் ஏற்படுத்துவதாக தெரியவந்துள்ளது.

கொரோனா வைரஸ் விந்தணுக்களின் உற்பத்தி மற்றும் பாலியல் ஹார்மோன்களின் உருவாக்கத்தை பாதிக்கும். இது கொரோனா தொற்று என்றும் சொல்லிவிட முடியாது. கொரோனாவால் ஏற்படும் மனச்சோர்வு, மன அழுத்தங்களும் காரணமாக இருக்கலாம் எனவும் மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News