Kathir News
Begin typing your search above and press return to search.

கேரளாவில் இரண்டாவது முறை உச்சத்தை எட்டிய கொரானா வைரஸ் தொற்றுக்கள்.! என்ன நடக்கிறது?

கேரளாவில் இரண்டாவது முறை உச்சத்தை எட்டிய கொரானா வைரஸ் தொற்றுக்கள்.! என்ன நடக்கிறது?

கேரளாவில் இரண்டாவது முறை உச்சத்தை எட்டிய கொரானா வைரஸ் தொற்றுக்கள்.! என்ன நடக்கிறது?

Saffron MomBy : Saffron Mom

  |  10 Jan 2021 7:08 AM GMT

நாட்டில் கொரானா தொற்று நோயை எதிர்த்து சிறப்பாக போராடி வெற்றி பெற்றதாக, அதற்குள் சர்வதேச அளவிலும் இந்திய அளவிலும் 'விருதுகளை' வாங்கிக் குவித்த கேரளா தற்போது தொற்று நோய்க்கு ஆளான மிக மோசமான மாநிலங்களில் ஒன்றாக மாறியுள்ளது.

கொரானா வைரஸ் தொற்றின் தினசரி எண்ணிக்கை நாட்டின் அனைத்து பகுதிகளிலும் குறைந்து வரும் வேளையில் தொடர்ந்து கவலைக்குரிய மாநிலமாக கேரளா இருந்து வருகிறது. தினசரி பதிவு செய்யப்படும் புதிய தொற்றுகள் இந்தியாவில் சராசரியாக ஒரு நாளைக்கு 19 ஆயிரமாக இருக்கிறது. இதுதான் கடந்த 6 மாதத்தில் மிகக் குறைந்த எண்ணிக்கையாகும். கேரளா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய இரு மாநிலங்கள் மட்டுமே மொத்தத் தொற்றுகளில் 45 சதவீதத்திற்கும் அதிகமாக பங்களிப்பு செய்கின்றன.

இந்தியாவில் மக்கள் தொகையில் 3 சதவீதம் மட்டுமே உள்ள ஒரு மாநிலம், நான்கில் ஒரு பகுதி தொற்றுகளை கடந்த ஒரு வாரத்தில் பங்களிப்பு செய்துள்ளது. கடந்த வாரத்தில் இந்திய அளவில் பதிவு செய்யப்பட்ட 1, 28, 604 தொற்றுப் பதிவுகளில் 35 ஆயிரத்து 164 தொற்றுகள் கேரளாவில் இருந்து வந்துள்ளன. இதை மத்திய சுகாதார அமைச்சகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மொத்த வழக்குகளில் 20 சதவிகித வழக்குகள் மகாராஷ்டிராவில் இருந்து வந்த வண்ணம் உள்ளன. இந்த இரு மாநிலங்களில் தொற்று நோய் பரவலை குறைப்பது தான் அடுத்த சில வாரங்களில் இந்திய அளவில் கொரானா வைரசிற்கு எதிரான போராட்டத்திற்கு முக்கியமாகும். அதிக அளவிலான எண்ணிக்கையில் கேரளாவில் இருந்து தொடர்ந்து வருவதை அடுத்து மத்திய அரசு ஒரு உயர்மட்டக் குழுவை தொற்றுநோயை எதிர்க்கும் தலையீடுகளை உயர்த்துவதற்கு அனுப்பியுள்ளது. கேரளாவில் தொற்று நோய் விகிதம் அதிகரித்து வருகிறது. தேசிய அளவில் பாசிட்டிவிட்டி விகிதம் 5 முதல் 6 சதவிகிதம் இருக்கிற பட்சத்தில் கேரளாவின் பாசிட்டிவிட்டி விகிதம் கிட்டத்தட்ட 10% ஆக சமீப நாட்களில் இருக்கிறது.

கேரளாவில் உச்ச தொற்று நோய் பரவல் இருப்பது இது இரண்டாவது முறை. முதல் முறை மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து கட்டாயமாக சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட லட்சக்கணக்கான வெளிநாட்டவர்களின் மூலம் ஆரம்பித்தது. இந்த முறை வருவதற்கு காரணம் திருவிழா (உதாரணம்: கிறிஸ்துமஸ்) காலமோ அல்லது டிசம்பரில் கடைசி வாரத்தில் உள்ளூர் தேர்தல்கள் வைக்கப்பட்ட தான் காரணமாக இருக்கலாம் .தொற்றுநோய் காலங்களில் திருவிழாக்கள் என்பது குடும்பத்தினர் மட்டுமே பங்கேற்கும் விஷயமாக இருந்தாலும், டெல்லி உள்பட இந்தியாவின் பல மாநிலங்களில் திருவிழாக்கள் நடப்பதற்கு கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு முன்னதாகவே மக்கள் கடைகளுக்கு படையெடுத்துச் சென்று வைரஸை அதிகரித்திருக்கலாம்.

இதிலும் நிலைமை அந்த அளவிற்கு மோசம் இல்லாமல் அக்டோபர் நடுப்பகுதியில் தொற்றுநோய் முதன்முதலில் உச்சத்தை எட்டிய போது 15 சதவிகிதம் இருந்த பாசிட்டிவிட்டி விகிதம் தற்போது 10 சதவீதமாக உள்ளது. இறப்பு விகிதம் ஓரளவிற்கு கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளது.

தேசிய சராசரியை விட அதிக அளவு முதியவர்கள் இருப்பதும், நிறைய துணை வியாதிகளை வைத்துக்கொண்டு இருப்பதும் இந்த தொற்று நோய் வருவதற்கான காரணமாக இருக்கலாம். மாநில அதிகாரிகளை பொருத்தவரை கேரளா விகிதத்தை நோயை கட்டுப்படுத்த இரு உத்திகளை பின்பற்றி வருகிறது. உச்சத்தை தாமதப்படுத்துவது, உயிரிழப்புகளை குறைப்பது ஆகியன ஆகும்.

With Inputs from: Times Now

Next Story
கதிர் தொகுப்பு
Trending News