Kathir News
Begin typing your search above and press return to search.

கொரோனா வைரஸ் அதிகரிப்பு: நாக்பூரில் ஒரு வாரம் ஊரடங்கு.!

உலக நாடுகளை உலுக்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. மற்ற நாடுகளை காட்டிலும் இந்தியாவில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருந்தது.

கொரோனா வைரஸ் அதிகரிப்பு: நாக்பூரில் ஒரு வாரம் ஊரடங்கு.!
X

ThangaveluBy : Thangavelu

  |  15 March 2021 9:44 AM IST

உலக நாடுகளை உலுக்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. மற்ற நாடுகளை காட்டிலும் இந்தியாவில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருந்தது.

கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்றின் பாதிப்பு குறைந்து வரும் வேளையில் மீண்டும் சில மாநிலங்களில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.




அதே போன்று மகாராஷ்டிராவில் சமீப காலங்களாக கொரோனா பாதிப்புகள் குறைந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாட்டில் மகாராஷ்டிரா பாதிப்பு எண்ணிக்கையில் முதல் இடத்தில் உள்ளது.

கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பல கோடி மக்கள் தொற்றில் இருந்து பாதுகாப்பாக இருந்தனர். இந்நிலையில், நாக்பூர் மாவட்டத்தில் இன்று முதல் வருகிற 21ம் தேதி வரை ஒரு வார காலத்திற்கு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.





அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு மட்டும் மக்கள் வெளியில் வரவேண்டும் என அம்மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதனால் அம்மாநிலம் முழுவதும் முன்னெச்சரிக்கையாக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஊரடங்கு அமல்படுத்த ஆலோசனை நடைபெற்று வருகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News