Kathir News
Begin typing your search above and press return to search.

கொரோனா வார்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 பேர் உயிரிழப்பு.. நிவாரணம் அறிவித்த பிரதமர் மோடி.!

தீடீரென்று ஏற்பட்ட தீ விபத்தில் 13 பேர் உடல் கருகி பலியானார்கள்.

கொரோனா வார்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 பேர் உயிரிழப்பு.. நிவாரணம் அறிவித்த பிரதமர் மோடி.!
X

ThangaveluBy : Thangavelu

  |  23 April 2021 9:57 AM IST

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா சிகிச்சை வார்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 நோயாளிகள் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் மற்றும் நிவாரணத்தொகை அறிவித்துள்ளார்.





மகாராஷ்டிரா மாநிலம், பால்கர் மாவட்டத்தில் உள்ள விரார் பகுதியில் கொரோனா சிகிச்சை மையம் உள்ளது. அந்த மையத்தில் ஏராளமானோர்கள் சிகிச்சை பெற்று வந்தநிலையில், தீடீரென்று ஏற்பட்ட தீ விபத்தில் 13 பேர் உடல் கருகி பலியானார்கள். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக மகாராஷ்டிரா மாநில அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.





இந்நிலையில், தீ விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அளிக்கப்படும் எனவும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் எனவும் பிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும், விபத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக குறிப்பிட்டுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News