Kathir News
Begin typing your search above and press return to search.

மனைவிகளை மாற்றுவதற்கு குடும்ப விழா: கோடி, கோடியாக பணம் சம்பாதிக்கும் ஆண்கள்: கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்!

மனைவிகளை மாற்றுவதற்கு குடும்ப விழா: கோடி, கோடியாக பணம் சம்பாதிக்கும் ஆண்கள்: கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்!

ThangaveluBy : Thangavelu

  |  10 Jan 2022 8:16 AM GMT

சமூக வலைதளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் குரூப்களை அமைத்து அதன்மூலம் அறிமுகமாகும் நபர்களுக்கு தங்களின் மனைவிகளை விபச்சாரத்திற்கு அனுப்பி கோடி, கோடியாக பணம் சம்பாதிக்கும் கேரள ஆண் ஒருவர் போலீசாரிடம் சிக்கியுள்ளார்.

கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், சங்கனாச்சேரி பகுதியில் வசிக்கின்ற ஒரு இளைஞர் தன்னுடைய மனைவியை கட்டாயப்படுத்தி கடந்த இரண்டு ஆண்டாக மற்றவர்களுக்கு விற்று பணம் பெற்று வந்துள்ளார். இது போன்ற சம்பவங்களுக்கு இளம்பெண் மறுப்பு தெரிவித்தால் அவரை அவருடைய கணவர் அடித்து துன்புறுத்துவார் என்ற தகவலும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.


இந்நிலையில், அதே போன்று நேற்று (ஞாயிற்றுக்கிழமை) என்பதால் இளம்பெண்ணை வேறு ஒரு இடத்திற்கு அழைத்து சென்ற கணவர் மற்றவர்களுடன் செல்ல வேண்டும் என்று கட்டாயப்படுத்தியுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த இளம்பெண் அங்கிருந்து தப்பி வந்து கருகச்சால் காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்துள்ளார். தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து போலீசாரிடம் புகாராக அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் கணவரை அழைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த வாலிபர் போலீசாரிடம் கூறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைதளங்கள் மூலமாக நாங்கள் குடும்ப விழா என்ற பெயர்களில் குரூப் ஒன்றை தொடங்கி செயல்படுத்தி வருகிறோம். இந்த குரூப்பில் சுமார் 2000 பேர் உறுப்பினர்களாக செயல்படுகிறோம். நாங்கள் அனைவரும் வாரத்திற்கு மூன்று நாட்கள் எதாவது ஒரு நண்பரின் வீட்டில் குடும்ப விழாவை நடத்துவோம். அப்போது ஒவ்வொரின் மனைவிகளை வேறு ஒரு நண்பர்களுக்கு விருந்தாக்குவோம் என்றார். இது போன்று விழா ஏற்பாடு செய்வதால் போலீசாருக்கு எங்கள் மீது எவ்வித சந்தேகமும் ஏற்படுவதில்லை. இதன் மூலம் பல கோடி ரூபாய்கள் எங்களுக்கு கிடைக்கிறது. இதனை வைத்து ஆடம்பர வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.

இது போன்ற நிகழ்ச்சிகளை ஓட்டல் மற்றும் லாட்ஜ்களில் நடத்தினால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுவிடும். இதுவே ஒரு வீட்டில் விழா நடத்தினால் யாருக்கும் எவ்வித சந்தேகமும் ஏற்படுவதில்லை என்ற காரணத்தை கூறியது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அந்த குரூப்பில் உள்ளவர்களை போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அதில் சுமார் 2000 பேர் உள்ளது தெரியவந்துள்ளது. கேரளாவில் தங்களின் மனைவிகளை மாற்றிக்கொள்வதற்காக ஒரு குழு இயங்கி வருவது போலீசாரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இந்த குழுவில் உள்ளவர்கள் இதுவரை 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் பலர் சிக்க வாய்ப்பு இருப்பதாக போலீசார் கூறியுள்ளனர். இந்த குழுவில் அரசு உயர் அதிகாரிகளும் சிலர் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்திய கலாச்சாரத்தை பார்த்து மேற்கு உலக நாடுகள் வரவேற்கும் சமயத்தில் இதுபோன்ற சம்பவங்கள் அதிர்ச்சியை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

Source: Daily Thanthi

Image Courtesy:The New Indian Express

Next Story
கதிர் தொகுப்பு
Trending News