Kathir News
Begin typing your search above and press return to search.

கொரோனா மூன்றாவது அலை எப்படி இருக்கும்? IIT ஆராய்ச்சியாளர்கள் முடிவு !

கொரோனா 3வது அலை இந்த மாதம் துவங்க உள்ளது.

கொரோனா மூன்றாவது அலை எப்படி இருக்கும்? IIT ஆராய்ச்சியாளர்கள் முடிவு !
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  3 Aug 2021 1:17 PM GMT

இந்தியாவில் கொரோனாவின் மூன்றாவது அலை ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கி வரும் அக்டோபரில் உச்சத்தை எட்டும். தினமும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் வைரசால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என்று இந்திய உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தைச்(IIT) சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். உலகம் முழுதும் கடந்த 20 மாதங்களாக கொரோனா தொற்று ஆட்டிப் படைத்து வருகிறது. தற்போது தான் இரண்டாம் அலையின் தாக்கம் படிப்படியாக குறையத் துவங்கியது. இதனால் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாமல் மக்கள் அலட்சியம் காட்டினர்.


ஏப்ரல் மாதத்தில் பாதிப்பு அதிகமாக இருந்தது. தினசரி பாதிப்பு நான்கு லட்சத்தை கடந்தது. இதன்பின் பாதிப்பு படிப்படியாக குறைந்தது. எனினும், கொரோனா 3வது அலை பரவும் அபாயம் உள்ளது என்று டாக்டர்கள் மற்றும் சுகாதாரத் துறை நிபுணர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். இதை உறுதி செய்வது போல், வேகமாக குறைந்து வந்த தொற்று பாதிப்பு, கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் IIT சேர்ந்த ஆராய்ச்சியாளர் கணித முறை அடிப்படையில் கொரோனா 3வது அலையை கணித்துள்ளனர்.


இதுபற்றி ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், "கேரளா மற்றும் மஹாராஷ்டிராவில் தற்பொழுது பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், 3வது அலை பரவல் அடுத்த சில நாட்களில் துவங்கும். எங்கள் கணிப்பின்படி ஆகஸ்ட் மாதத்தில் பரவும் மூன்றாவது அலை, அக்டோபரில் உச்சத்தை அடையும். மூன்றாவது அலை பாதிப்பை தடுப்பதில் தடுப்பூசிக்கு முக்கிய பங்கு உள்ளது. அதனால், தடுப்பூசி போடும் பணியை விரைவுபடுத்தினால் மூன்றாவது அலை பாதிப்பை நிச்சயம் குறைக்க முடியும் என்று அவர்கள் கூறினார்கள்.

Input: https://m.timesofindia.com/india/if-no-new-variant-strikes-3rd-covid-wave-to-be-mild-study/amp_articleshow/84990625.cms

Image courtesy: Times of India news


Next Story
கதிர் தொகுப்பு
Trending News