கொரோனாவுக்கு எதிராக சித்த மருந்துகள்: மத்திய அரசின் புதிய தகவல் !
சித்த மருந்துக் பொருட்களை கொரோனாவுக்கு எதிராகப் பயன்படுத்த மத்திய அரசு முடிவு.
By : Bharathi Latha
நாடாளுமன்ற மாநிலங்களவையில் கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால் கூறுகையில், கொரோனா அறிகுறிகள் உள்ள நோயாளிகளின் சிறப்பான செயல்திறன் மிக்க மருந்துகளை அடையாளம் காண்பதற்காக நாடு முழுவதும் உள்ள 152 மையங்களில் 126 ஆய்வுகள் பல்வேறு ஆராய்ச்சி அமைப்புகள் மற்றும் தேசிய ஆராய்ச்சி நிறுவனங்கள் மூலம் தொடங்கப்பட்டன. அங்கு மேற்கொண்டு வரும், ஆய்வுகளை பொருத்தவரை, 66 ஆராய்ச்சிகள் ஆயுர்வேதத்தில் இருந்தும், 26 ஹோமியோபதியில் இருந்தும், 13 சித்தாவில் இருந்தும், 8 யுனானியில் இருந்தும், 13 யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தில் இருந்தும் மேற்கொள்ளப்பட்டன.
எனவே மத்திய அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த ஆய்வில் 90% ஆய்வு நிறைவு செய்துவிட்டது. இன்னும் 10 சதவீதமாவது மீதும் உள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு, உயிரி தொழில்நுட்பத் துறை, அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சிக் குழு, எய்ம்ஸ் மற்றும் ஆயுஷ் அமைப்புகளில் இருந்து பிரதிநிதிகளைக் கொண்ட ஆயுஷ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பல்துறை பணிக்குழுவை ஆயுஷ் அமைச்சகம் அமைத்துள்ளது. விரிவான ஆய்வு மற்றும் நாடு முழுவதும் இருக்கும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிபுணர்களுடனான ஆலோசனைக்குப் பிறகு, கொரோனா உறுதிப்படுத்தப் பட்டுள்ள நபர்களுக்கான மருத்துவ செயல்முறைகளை ஆயுஷ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிக்குழு உருவாக்கியுள்ளது.
கபசுர குடிநீர் ஆகியவை கொரோனா சிகிச்சைக்காக அடையாளம் காணப்பட்டுள்ளன. சித்த மருத்துவ முறையில் தயாரிக்கப்படும் கபசுர குடிநீர் லேசானது முதல் மிதமான கோவிட் பாதிப்புகளின் சிகிச்சையில் பலனளிப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஆராய்ச்சி குழுக்கள் மற்றும் தேசிய நிறுவனங்கள் மூலம் கபசுர குடிநீரை நாடு முழுவதும் விநியோகிக்க பட்டு வருகிறது.
Image courtesy: firstpost news