Begin typing your search above and press return to search.
கொரோனா தடுப்பூசி: 60 வயதை கடந்தவர்கள் 50 லட்சம் பேர் முன்பதிவு.!
கொரோனா தடுப்பூசி 2ம் கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கும் செலுத்தப்பட்டு வருகிறது.

By : Thangavelu
கொரோனா தடுப்பூசி 2ம் கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கும் செலுத்தப்பட்டு வருகிறது.
இதற்காக கோவின் இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்வதற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.
இந்நிலையில், கோ-வின் இணையதளத்தில் பெயர்களை பதிவு செய்யும் வசதி 1ம் தேதி காலை 9 மணிக்கு தொடங்கியது.
இதுவரை சுமார் 50 லட்சம்பேர் தங்கள் பெயர்களை பதிவு செய்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவலை தெரிவித்துள்ளது.
அதுபோன்று இந்த பிரிவினரில் 2 லட்சத்து 8 ஆயிரத்து 791 பேருக்கு இதுவரை முதல் 'டோஸ்' தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதன் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
Next Story