கச்சா எண்ணெய்க்கு அதிக விலையை நிர்ணயம் செய்து G7 - இந்தியா ஆதரவு தெரிவிக்காதது ஏன்?
ரஷ்யாவின் கச்சா எண்ணெயைக்கு அதிக விலையை நிர்ணயம் செய்த ஜி7 நாடுகளில் முடிவுக்கு இந்தியா ஆதரவு அளிக்கவில்லை.
By : Bharathi Latha
ரஷ்யாவில் தற்போதைய நிலைமை மிகவும் மோசமாக தான் இருக்கிறது. குறிப்பாக உக்ரைன்- ரஷ்ய போர் காரணமாக பல்வேறு நாடுகளின் மீதான வர்த்தக தடை காரணமாகவும், பல்வேறு நாடுகள் ரஷ்யாவிடம் இறக்குமதி செய்வதற்கு தற்பொழுது தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. அதனைத் தொடர்ந்து தற்போது ரஷ்யாவின் கச்சா எண்ணெய்க்கு G7 நாடுகள் விதித்த விலை உச்சவரம்பிற்கு இந்தியா தன்னுடைய ஆதரவை தெரிவிக்கவில்லை. இதன் காரணமாக இந்தியாவின் இந்த ஒரு செயலை ரஷ்யா வரவேற்று இருக்கிறது. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்ய நடத்திவரும் போரை தொடர்ந்து, அந்நாட்டின் மீது அமெரிக்கா ஐரோப்பிய யூனியன் நாடுகள் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. மேலும் ரஷ்யாவின் பொருளாதாரத்தில் அதன் கச்சா விற்பனை முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் ரஷ்யாவின் பொருளாதாரத்தை சீர்குலைக்க வேண்டும் என்று நோக்கில் ரஷ்ய கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றிக்கும் 60 அமெரிக்க டாலர்கள் என்று G7 நாடுகள் சமீபத்தில் நிர்ணயம் செய்தது.
எனவே ஐரோப்பிய யூனியனும் இதை ஏற்றுக் கொண்டது. இந்த விலையில் மட்டுமே ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணங்களை வாங்க வேண்டும் என்ற இந்த நாடுகள் உத்தரவிட்டன. கூடுதலாக எண்ணெய் விற்றால் ரஷ்ய எண்ணெய் ஏற்றுமதிக்கான காப்பீடு நிதி மற்றும் கப்பல் போக்குவரத்து உள்ளிட்ட பிற சேவைகளும் தடை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
மேலும் இந்த உச்சவரம்பிற்கு ஆதரவு அளிக்க இந்தியா மறுத்து இருக்கிறது. இந்தியாவின் இந்த முடிவை ரஷ்ய துணை பிரதமர் அலெக்சாண்டர் வரவேற்றுகிறார். இந்தியாவின் ஆதரவுக்கு தொடர்ந்து எண்ணெய் சப்ளை செய்வதில் முழு ஆதரவு தருவதாகவும் அவர் உறுதிகள் அளித்து இருக்கிறார். இந்த அதிகப்படியான விலை உயர்வு கட்டாயம் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் அதனால் இந்திய தற்போது இந்த ஒரு முடிவை ஆதரிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Input & Image courtesy: Dinamalar