காங்கிரஸ் ஆட்சியைவிட இரண்டு மடங்கு உயர்ந்த பால் உற்பத்தி - பிரதமர் மோடி சொன்ன சூட்சமம்!

நாட்டில் உள்ள 2 லட்சத்திற்கும் அதிகமான கிராமங்களைச் சேர்ந்த 2 கோடி விவசாயிகளிடமிருந்து ஒவ்வொரு நாளும் 2 முறை பாலினை கொள்முதல் செய்யும் பால் கூட்டுறவுகள் அதனை வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்கின்றன என்று பிரதமர் மோடி கூறினார்.
வாடிக்கையாளர்களிடமிருந்து பெறப்பட்ட பணத்தில் 70 சதவீதத்திற்கும் கூடுதலாக விவசாயிகளுக்கு நேரடியாக செல்கிறது. ஒட்டுமொத்த உலகில், வேறு எந்த நாட்டிலும் இந்த விகிதம் இல்லை. இந்திய பால்வளத்துறை தொழிலாளர்களில் 70 சதவீதம் பேர் பெண்களாக உள்ளனர்.
இந்திய பால் கூட்டுறவுகளின் உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானவர்கள் பெண்கள். எட்டரை லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள பால்வளத் துறையின் உற்பத்தி, கோதுமை மற்றும் அரிசி உற்பத்தியின் இணைந்த மதிப்பை விட அதிகமாகும்.
இந்தியா, 2014-ல் 146 மில்லியன் டன் பால் உற்பத்தி செய்துள்ளது. இது தற்போது 210 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது. அதாவது சுமார் 44 சதவீதம் அதிகரிப்பு ஆகும்.
உலக அளவிலான வளர்ச்சி 2 சதவீதமாக உள்ளதற்கு மாறாக, இந்திய பால் உற்பத்தியின் அதிகரிப்பு விகிதம் 6 சதவீதமாக உள்ளது. பால் தரும் விலங்குகள் மற்றும் பால் வளத்துறையுடன் தொடர்புடைய அனைத்து விலங்குகளின் மிகப்பெரிய புள்ளி விவர தகவலை இந்தியா கட்டமைத்து வருகிறது.
2025-க்குள் 100 சதவீத கால்நடைகளுக்கு கோமாரி மற்றும் புருசெலோசீஸ் தடுப்பூசி செலுத்த நாங்கள் தீர்மானித்துள்ளோம். நமது விஞ்ஞானிகள் லும்பி எனும் தோல் கட்டி நோய்க்கும் உள்நாட்டிலேயே தடுப்பூசி தயாரித்துள்ளனர்.
கால்நடை பராமரிப்புத் துறையில் செயல்பாடுகளை முழுமையாக கண்டறியும் டிஜிட்டல் முறையை உருவாக்க இந்தியா பணியாற்றி வருகிறது. உலகளாவிய பால் உற்பத்தியில் 23 சதவீதம் என்ற கணக்குடன், இந்திய பால்வளத் தொழில் துறை ஆண்டுக்கு 210 மில்லியன் டன் உற்பத்தி என்பதாக உள்ளது என பிரதமர் மோடி தெரிவித்தார்.
Input From: Thehindubusinessline