Kathir News
Begin typing your search above and press return to search.

மர்ம உறுப்பு சிதையும் வரை விடாத கொடூரம் - மதரசாவிற்குள் 10 வயது சிறுவன் பாலியல் பலாத்காரம்!

Darul-Uloom teacher Shoeb Akhtar rapes a 10-year-old boy inside madarsa, arrested

மர்ம உறுப்பு சிதையும் வரை விடாத கொடூரம் - மதரசாவிற்குள் 10 வயது சிறுவன் பாலியல் பலாத்காரம்!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  14 Feb 2022 3:03 PM GMT

மதரசாவில் 10 வயது சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்த தாருல்-உலூம் ஆசிரியர் ஷோப் அக்தர் கைது செய்யப்பட்டார்.

ஹைதராபாத் சாஸ்திரிபுரத்தில் உள்ள தாருல்-உலூம் மதர்சாவில் பீகாரைச் சேர்ந்த 25 வயது அரபு ஆசிரியர் ஷோப் அக்தர் 10 வயது சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்தார். சம்பவம் வெளிச்சத்துக்கு வந்ததையடுத்து, பிப்ரவரி 7, 2021 அன்று மைலார்தேவப்பள்ளி போலீசார் குற்றவாளியை கைது செய்தனர்.

பீகாரைச் சேர்ந்த ஷோப் அக்தர், தாருல் உலூம் மதரஸாவில், பத்து நாட்களாக சிறுவனை அடைத்து வைத்து கொடுமை செய்து வந்துள்ளார். பிப்ரவரி 06, ஞாயிற்றுக்கிழமை, பாதிக்கப்பட்ட சிறுவன் தனது தந்தையிடம் தொடர்ந்து முதுகுவலி இருப்பதாக சொன்னதை அடுத்து, பெற்றோர்கள் தங்கள் மகனின் அந்தரங்க பாகங்களில் வீக்கம் மற்றும் இரத்தப்போக்கு காயங்களைக் கண்டனர்.

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த சிறுவனின் பெற்றோர் மற்ற உள்ளூர் மக்களுடன் மதர்சாவைச் சுற்றி நின்று எதிர்ப்புத் தெரிவித்தனர்.

காவல்துறையின் கூற்றுப்படி, பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் தென்னாப்பிரிக்காவிலிருந்து இரண்டு மாதங்களுக்கு முன்பு திரும்பிய பின்னர், சிறுவனை அவரை மதரசாவில் சேர்த்துள்ளனர். தற்போது ஷோப் மற்றும் மதர்சா அமைப்பாளர்கள் மீது மைலார்தேவப்பள்ளி காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுவனை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், பள்ளியில் அரபி ஆசிரியர் ஷோப் அக்தரை கைது செய்தனர்.

இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து பேசிய இன்ஸ்பெக்டர் கே.நரசிம்மா, "பாதிக்கப்பட்ட சிறுவனின் தாய் கொடுத்த புகாரின் பேரில் ஷோப்பை கைது செய்துள்ளோம். குற்றம் சாட்டப்பட்டவர் மீது ஐபிசி 377 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

குற்றம் சாட்டப்பட்டவர் மற்ற மாணவர்களுக்கு எதிராக இதுபோன்ற குற்றங்களைச் செய்தாரா என விசாரணை நடத்தி வருகின்றனர். மதரஸாக்களில் கற்பழிப்பு சம்பவங்கள் தற்போது அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் ஜனவரி 27 அன்று, உத்தரபிரதேசத்தின் மைன்புரி மாவட்டத்தில் 8 வயது மாணவியை 52 வயது மதகுரு ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்தார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், கர்நாடகா மாநிலம் துமகுருவைச் சேர்ந்த மதரசா ஆசிரியர் 2015-ம் ஆண்டு மைனர் சிறுவனை கொடுமை செய்ததற்காக 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News