Kathir News
Begin typing your search above and press return to search.

மகள் இந்து மத வாலிபரை விரும்பியதால் ஆட்டோ ஏற்றிக்கொல்ல முயன்ற இஸ்லாம் கான்!

மகள் இந்து மத வாலிபரை விரும்பியதால் ஆட்டோ ஏற்றிக்கொல்ல முயன்ற இஸ்லாம் கான்!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  31 July 2022 7:04 AM IST

ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரை சேர்ந்தவர் இஸ்லாம் கான். இவரின் மகள் நக்மா கான் மற்றும் நரேந்திர குமார் சைனி ஒருவரையொருவர் காதலித்து வந்தனர். ஆனால், இவர்களின் காதலினை இரு குடும்பத்தாரும் ஏற்கவில்லை.

இந்நிலையில், கடந்த பிப்ரவரி 22அன்று இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டனர். இதனையடுத்து, நக்மாவின் தந்தை தன் மகளை நரேந்திர குமார் கடத்திச்சென்று கட்டாய கல்யாணம் செய்துவிட்டதாகக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் கர்ப்பிணியான தனது மனைவியை தினசரி மருத்துவப்பரிசோதனைக்காக நரேந்திர குமார் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது வழியில் தனது மனைவிக்கு ஜூஸ் வாங்கிக்கொடுத்துள்ளார். அத்தருணத்தில் ஆட்டோவில் வந்த இஸ்லாம், தன் மகள் மீது ஆட்டோ ஏற்றிக்கொல்ல முயன்றுள்ளார்.

பட்டப்பகலில் சஹ்யோக் நகர் பகுதியில் இச்சம்பவம் நடந்தேறியது. எப்படியோ அதிர்ஷ்டவசமாக அந்த மகள் உயிர் தப்பினார். அப்போது மக்கள் கூட்டம் கூடுவதைக் கண்ட தந்தை ஆட்டோவில் தப்பிச்சென்றார்.

இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாதிக்கப்பட்ட இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Input From: Etv

Next Story
கதிர் தொகுப்பு
Trending News