Kathir News
Begin typing your search above and press return to search.

தவிடு பொடியான மிஷனரிகள் திட்டம்: நிலம் மற்றும் பணம் கொடுத்து மதமாற்றம் செய்யப்பட்ட பழங்குடியினர் மீண்டும் இந்து மதத்திற்கே திரும்பினர்!

Days after 181 Christians reconverted to the original tribal Sarna faith, 61 tribal Christian families do Gharwapsi

தவிடு பொடியான மிஷனரிகள் திட்டம்: நிலம் மற்றும் பணம் கொடுத்து மதமாற்றம் செய்யப்பட்ட பழங்குடியினர் மீண்டும் இந்து மதத்திற்கே திரும்பினர்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  26 March 2022 9:36 AM GMT

ஜார்க்கண்டின் கிராமப்புற குக்கிராமங்களில் செயல்படும் கிறிஸ்தவ மிஷனரிகள், பழங்குடியினரை நிலம் மற்றும் பணம் கொடுத்து அவர்களை மதமாற்றம் செய்து வரும் நிலையில், பல்வேறு இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இந்த அப்பாவி பழங்குடியினரை அவர்களுடைய பிடியில் இருந்து விடுவிக்க அயராது உழைத்து வருகின்றனர்.

ஜார்க்கண்டின் கர்வா மாவட்டத்தின் வெவ்வேறு கிராமங்களில் 181 பழங்குடி சமூக உறுப்பினர்கள் மீண்டும் தாய் மததிற்கு திரும்பினார். ஜார்கண்டின் சாஹிப்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள வன்வாசி பழங்குடியினர் நூற்றுக்கணக்கானோர் மார்ச் 25, 2022 அன்று அதே போல செய்தனர்.

விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பை சேர்ந்த காளிசரண் மண்டல், சாஹிப்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள 61 சர்னா பழங்குடியின குடும்பங்களைத் தாய் மதம் திரும்புவதற்கான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குக்கிராமங்களில் செயல்படும் கிறிஸ்தவ மிஷனரிகளால் மதம் மாறியவர்களாக ஏமாற்றப்பட்ட மக்களை மீண்டும் இந்து மதத்திற்குத் திரும்பச் செய்வதே அவர்களின் குறிக்கோளாகும்.

பாதிக்கப்படக்கூடிய ஆதிவாசிகள், பஹாடியா சாதியைச் சேர்ந்தவர்கள், தலித் சமூகம் மற்றும் ஏழைகளை கிறிஸ்தவ மிஷனரிகளின் பிடியில் இருந்து காப்பாற்றுகிறார்கள்.

விஷ்ராம்பூர் கோரையாப்கார் கிராமத்தைச் சேர்ந்த 18 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 104 பேரும், குந்தி தோலா கராச்சலி கிராமத்தைச் சேர்ந்த 7 குடும்பங்களைச் சேர்ந்த 42 பேரும், மஹங்கை கிராமத்தைச் சேர்ந்த 8 குடும்பங்களைச் சேர்ந்த 35 பேரும் கிறிஸ்தவத்தை விட்டு வெளியேறி இந்து மதத்துக்குத் திரும்பினர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News