Kathir News
Begin typing your search above and press return to search.

பாகிஸ்தானில் மலிந்துபோன மனித நேயம் - இரண்டு மணி நேரத்துக்கு ஒரு பெண் பலாத்காரம் செய்யப்படுவதாக ஆய்வில் தகவல்

பாகிஸ்தானில் இரண்டு மணி நேரத்துக்கு ஒரு பெண் பலாத்காரம் செய்யப்படுகிறார் என ஆய்வு முடிவுகள் அதிர்ச்சி அளிக்கும் வகையில் வெளிவந்துள்ளன.

பாகிஸ்தானில் மலிந்துபோன மனித நேயம் - இரண்டு மணி நேரத்துக்கு ஒரு பெண் பலாத்காரம் செய்யப்படுவதாக ஆய்வில் தகவல்

Mohan RajBy : Mohan Raj

  |  14 Oct 2022 6:16 AM GMT

பாகிஸ்தானில் இரண்டு மணி நேரத்துக்கு ஒரு பெண் பலாத்காரம் செய்யப்படுகிறார் என ஆய்வு முடிவுகள் அதிர்ச்சி அளிக்கும் வகையில் வெளிவந்துள்ளன.

பாகிஸ்தான் நாட்டில் ஒவ்வொரு இரண்டு மணி நேரத்துக்கும் ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. கௌரவ கொலைகள் அதிகம் நடைபெறும் பாகிஸ்தானில் பெண்களுக்கு உள்ள பாதுகாப்பு நிலைமையை சர்வே எடுத்துக்காட்டி கூறப்பட்டுள்ளது.

சாமா தொலைக்காட்சியின் புலனாய்வு பிரிவு நடத்திய கணக்கெடுப்பில் இந்த தகவல் வெளியாகி உள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் உள்துறை மற்றும் மனித உரிமைகள் அமைச்சகத்திடமிருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் கற்பழிப்பு வழக்குகள் அதிகரித்தாலும் தண்டனை விகிதம் 0.2% என மோசமாகவே உள்ளது. பாகிஸ்தானில் நாடு முழுவதும் தினமும் சுமார் 12 பெண்கள் கற்பழிக்கப்படுகின்றனர் என்பதையும் இந்த புள்ளி விவரம் காட்டுகிறது மேலும் பாகிஸ்தானில் கௌரவக் கொலைகள் அதிகரித்து வருவதையும் அதனை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.நா உட்பட சர்வதேச அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

பாகிஸ்தானின் மனித உரிமைகள் ஆணையத்தின் தரவுகளின்படி கடந்த நான்கு ஆண்டுகளில் 1957 கௌரவ கொலைகள் பதிவாகி இருப்பதாக எக்ஸ்ப்ரஸ் ட்ரிப்யூன் செய்தி வெளியிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.


Source - Malai malar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News