ஜனவரி 13 முதல் கொரோனா தடுப்பூசி செலுத்த முடிவு.. மத்திய அரசு தகவல்.!
ஜனவரி 13 முதல் கொரோனா தடுப்பூசி செலுத்த முடிவு.. மத்திய அரசு தகவல்.!
By : Kathir Webdesk
அவசர கால பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளித்த தேதியிலிருந்து 10 நாட்களுக்குள் கொரோனா தடுப்பூசி செலுத்த தயாராக இருப்பதாக மத்திய அரசு இன்று கூறியுள்ளது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சக பிரதிநிதிகள் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கொரோனா தடுப்பூசி ஒத்திகையில் கிடைத்த கருத்துகளின்படி அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டதிலிருந்து 10 நாட்களுக்குள் கொரோனா தடுப்பூசி செலுத்த அரசு தயாராக இருப்பதாக கூறப்பட்டது.
இதன் மூலம் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி வருகின்ற ஜனவரி 13ம் தேதி முதல் தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பை, சென்னை மற்றும் கொல்கத்தா ஆகிய 4 இடங்களில் பிரதான தடுப்பூசி மையங்கள் உள்ளன. நாட்டில் மொத்தம் 37 தடுப்பூசி மையங்கள் உள்ளன. தடுப்பூசிகள் அங்கு மொத்தமாக சேமிக்கப்பட்டு விநியோகிக்கப்படும் என மத்திய சுகாதாரத்துறைச் செயலர் ராஜேஸ் பூஷண் தெரிவித்துள்ளார்.
அவசர கால பயன்பாட்டின் அடிப்படையில் கோவேக்ஸின் தடுப்பூசியையும், கோவிஷீல்ட் தடுப்பூசியையும் பொதுமக்களுக்கு செலுத்த மத்திய அரசு கடந்த ஞாயிற்றுக்கிழமை அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.