Kathir News
Begin typing your search above and press return to search.

அஜித் தோவல் பாதுகாப்பில் குறைபாடு - 3 அதிகாரிகள் மீது அதிரடி நடவடிக்கை

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் வீட்டில் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டதன் காரணமாக மூன்று கமாண்டோ வீரர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

அஜித் தோவல் பாதுகாப்பில் குறைபாடு - 3 அதிகாரிகள் மீது அதிரடி நடவடிக்கை

Mohan RajBy : Mohan Raj

  |  19 Aug 2022 6:52 AM GMT

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் வீட்டில் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டதன் காரணமாக மூன்று கமாண்டோ வீரர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

தேசிய பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவலின் வீடு டெல்லியில் உள்ளது, சி.ஐ.எஸ்.எப் கமாண்டோ வீரர்கள் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.

டெல்லியில் உயர் பாதுகாப்பு மிகுந்த பகுதியில் இருக்கும் அஜித் தோவலின் வீட்டை கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி காலையில் பெங்களூருவை சேர்ந்த மர்ம நபர் ஒருவர் காரை கொண்டு மோத முயன்ற இதனால் அவரை இடையிலேயே வழிமறித்து கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்தின் போது அஜித் தோவல் வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மூணு கமாண்டோ வீரர்கள் மற்றும் அஜித் தோலுக்கு பாதுகாப்பு வழங்கும் படையின் தலைவரான டி.ஐ.ஜி மற்றும் அவரது கீழ் அதிகாரி ஆகியோர் மீது நீதி விசாரணை நடைபெற்றதில் அவர்கள் அலட்சியமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த நிலையில் அஜித்தோவல் வீட்டின் பாதுகாப்பில் அலட்சியமாக இருந்த மூன்று கமண்டோ வீரர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு மேலும் அதிகாரிகள் இருவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


Source - Maalai malar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News