Kathir News
Begin typing your search above and press return to search.

அரசு துறைகள் மின்சார வாகனங்களுக்கு மாற டெல்லி முதலமைச்சர் உத்தரவு.!

அரசு துறைகள் மின்சார வாகனங்களுக்கு மாற டெல்லி முதலமைச்சர் உத்தரவு.!

அரசு துறைகள் மின்சார வாகனங்களுக்கு மாற டெல்லி முதலமைச்சர் உத்தரவு.!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  26 Feb 2021 10:36 AM GMT

சுற்றுச்சூழலை பாதுகாக்கின்ற வகையில் பெட்ரோல் வாகனங்களை, மின்சார வாகனங்களாக மாற்றுவதற்கு டெல்லி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதை கட்டுப்படுத்துவதற்காக மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க மாநில அரசு முடிவு செய்யதுள்ளது.

இதனையடுத்து பெட்ரோல் வாகனங்கள் அனைத்தும், மின்சார வாகனங்களாக மாற்றுவதற்கு அனைத்து துறைகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், தனியார் நிறுவனங்களும், பொதுமக்களும் அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மின்சார வாகனங்களை பயன்படுத்துவதால் பல்வேறு வகையிலான மாற்றங்கள் ஏற்படும். இவ்வாறு அவர் தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News