Kathir News
Begin typing your search above and press return to search.

டெல்லியில் 3வது நாளாக வெளுத்து வாங்கும் கனமழை!

டெல்லியில் தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ளது. இடை, இடையே வெயில் அடித்தாலும் மழை பெய்யும்போது மிக அதிக கனமழையாக பெய்து வருகிறது. இதன்படி நேற்று முன்தினம் மற்றும் நேற்று காலையில் மீண்டும் கனமழை பெய்தது.

டெல்லியில் 3வது நாளாக வெளுத்து வாங்கும் கனமழை!

ThangaveluBy : Thangavelu

  |  2 Sep 2021 4:12 AM GMT

டெல்லியில் தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ளது. இடை, இடையே வெயில் அடித்தாலும் மழை பெய்யும்போது மிக அதிக கனமழையாக பெய்து வருகிறது. இதன்படி நேற்று முன்தினம் மற்றும் நேற்று காலையில் மீண்டும் கனமழை பெய்தது.


இடி, மின்னலுடன் டெல்லி முழுவதும் பரவலமாக பெய்த மழையால் சாலைகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் குட்டை போன்று தண்ணீர் தேங்கியது. இதன் காரணமாக சாலைகளில் சென்ற வாகனங்கள் தத்தளித்து செல்லும் நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், இன்று 3வது நாளாக கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. நகரம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. வாகன ஓட்டிகள் மிகுந்த சிரத்திற்கு ஆளாகியுள்ளனர். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

Source: DailyThanthi

Image Courtesy: ANI

https://www.dailythanthi.com/News/TopNews/2021/09/02082557/Heavy-rain-hits-the-National-Capital-for-second-day.vpf

Next Story
கதிர் தொகுப்பு
Trending News