ஆக்சிஜன் லாரிகளை தடுப்பவர்களை தூக்கில் போடுவோம்.. நீதிபதிகள் ஆவேசம்.!
ஆக்சிஜன் டேங்கர் லாரிகள் டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் செல்லும்போது, அதனை விவசாயிகள் என்ற போர்வையில் சிலர் மறித்து வருகின்றனர்.

By : Thangavelu
மருத்துவமனைக்கு எடுத்து செல்லும் ஆக்சிஜனை தடை செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களை தூக்கில் போடுவோம் என்று நீதிபதிகள் ஆவேசத்துடன் கூறியுள்ளனர். நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் நோயாளிகளின் எண்ணிக்கையால் வடமாநிலங்களில் ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது.
இதனால் ஆக்சிஜன் டேங்கர் லாரிகள் டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் செல்லும்போது, அதனை விவசாயிகள் என்ற போர்வையில் சிலர் மறித்து வருகின்றனர். அது போன்றவர்களால் மருத்துவமனைகளில் பல உயிர்கள் பறிபோகும் நிலைமை ஏற்பட்டுள்ளது. டெல்லியில் விவசாயிகள் என்ற போர்வையில் கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக வன்முறையாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், டெல்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறை தொடர்பாக பொதுநல மனு ஒன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விசாரணைக்கு வந்த போது, மத்திய மாநில அரசுகளிடம் விளக்கம் கேட்கப்பட்டது.
இது பற்றி பதில் அளித்த டெல்லி அரசு, ''480 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவைப்படுகிறது. ஆனால் தற்போது 297 மெட்ரிக் டன் மட்டுமே கிடைத்துள்ளது என கூறியது. இந்த நிலை தொடர்ந்தால் பல உயிர்கள் இழக்க நேரிடும் என கூறியது.
இதனைக் கேட்டு மிகவும் ஆவேசமடைந்த நீதிபதிகள், ஆக்சிஜன் வழங்குவதற்கு தடையாக இருப்பவர்களை தூக்கில் போடுவோம் என கூறினர். மருத்துவமனைகளுக்கு செல்லும் ஆக்சிஜன் லாரிகளை தடுக்கும் மத்திய, மாநில அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர்.
