Kathir News
Begin typing your search above and press return to search.

கெஜ்ரிவால் 'வீட்டுக் காவலில்' இல்லை - ஆம் ஆத்மி கூற்றை மறுத்த டெல்லி காவல்துறை.!

கெஜ்ரிவால் 'வீட்டுக் காவலில்' இல்லை - ஆம் ஆத்மி கூற்றை மறுத்த டெல்லி காவல்துறை.!

கெஜ்ரிவால் வீட்டுக் காவலில் இல்லை - ஆம் ஆத்மி கூற்றை மறுத்த டெல்லி காவல்துறை.!

Saffron MomBy : Saffron Mom

  |  8 Dec 2020 3:02 PM GMT

ஆம் ஆத்மி கட்சியினர் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று குற்றம் சாட்டிவந்த நிலையில், தற்போது அந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது டெல்லி காவல்துறை.

ஆம் ஆத்மி கட்சியினருக்கும் பிற கட்சி உறுப்பினர்கள் இடையே மோதல்களைத் தவிர்ப்பதற்கு முதலமைச்சர் வீட்டில் பாதுகாப்பு அதிகப்படுத்தியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். டெல்லி முதலமைச்சர் வீட்டுக் காவலில் வைக்கப்படவில்லை என்று டெல்லி காவல்துறை DCP அன்டோ அல்போன்ஸ் கூறினார்.

கெஜ்ரிவால் டெல்லி காவல்துறையால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக இன்று முன்னர் ஆம் ஆத்மி கட்சியினர் ட்விட் செய்திருந்தனர். ஆம் ஆத்மி கட்சித் தலைவர் ஸுரபா பரத்வாஜ், டெல்லி முதலமைச்சர் சிங்கு எல்லையில் விவசாயிகளைச் சந்தித்து மற்றும் பாரத் பந்திற்கு ஆதரவு அளித்துவந்த பின்னர், அவரது வீட்டைச் சுற்றி டெல்லி காவல்துறை தடுப்புகள் அமைத்து வீட்டுக் காவல் போல் நிலைமை ஏற்படுத்தி உள்ளதாகக் குற்றம்சாட்டியிருந்தார்.

நேற்று அவர் திரும்பிய பின்னர் கெஜ்ரிவாலைச் சந்திக்க யாரையும் அனுமதிக்கவில்லை என்று குற்றம் சாட்டினார். இருப்பினும் தற்போது டெல்லி காவல்துறை அந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது.

வடக்கு டெல்லி DCP பதிவிட்ட ட்விட்டில், அவர் டெல்லி முதலமைச்சர் வீட்டிற்கு வெளியே உள்ள புகைப்படத்தையும் பகிர்ந்து கொண்டார். அதில் நிலத்தின் சட்டத்திற்குள் இயங்குவதற்கான உரிமை உள்ளது என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் கெஜ்ரிவால் வீட்டுக் காவலில் வைத்திருப்பதாக ஆம் ஆத்மி கட்சியினர் குற்றம் சாட்டுவது முற்றிலும் தவறானது என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News