Kathir News
Begin typing your search above and press return to search.

எல்லையில் கான்ஸ்டபிளை தாக்கிய ஆர்பாட்டக்காரர்கள்!

எல்லையில் கான்ஸ்டபிளை தாக்கிய ஆர்பாட்டக்காரர்கள்!

எல்லையில் கான்ஸ்டபிளை தாக்கிய ஆர்பாட்டக்காரர்கள்!
X

Saffron MomBy : Saffron Mom

  |  13 Feb 2021 5:43 PM IST

டெல்லி எல்லைப் பகுதிகளை வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திவரும் போராட்டக்காரர்கள் அவ்வப்போது வன்முறையிலும் ஈடுபட்டு வருகின்றனர். ஜனவரி 26 இல் டிராக்டர் பேரணி என்ற பெயரில் வன்முறையை நடத்தினர். தற்போது டிக்ரி பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் வெள்ளிக்கிழமை டெல்லி காவல்துறையைச் சேர்ந்த நபரைத் தாக்கியுள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளான காவல்துறை ஜிதேந்திர ராணா என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர் டிக்ரீ எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் என்று கூறப்படும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்கப்பட்டுள்ளார். மேலும் தலையில் மற்றும் கால்களில் பலத்த காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இவர் எல்லைப் பகுதிகளில் சுவரொட்டிகளை ஒட்டிக் கொண்டிருக்கும் வேளையில் ஆர்பாட்டக்காரர்களால் தாக்கப்பட்டுள்ளார். இவர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயி ஒருவர் காணாமல் போனது தொடர்பாகச் சுவரொட்டியை ஒட்டிக்கொண்டிருந்தார். மேலும் டெல்லி காவல்துறையைச் சேர்ந்த கான்ஸ்டபிள் தாக்குதலுக்குப் பிறகு பல தையல்கள் போடவேண்டியிருந்தது.

தாக்குதல் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு ஊடகங்களின் செய்திகளின் படி காவல்துறையைத் தவறாகக் கருதி ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்கியதாகக் கூறப்படுகின்றது. பின்னர் இவர் மற்ற காவல்துறையால் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்.
Next Story
கதிர் தொகுப்பு
Trending News