டெல்லி கலவரம்.. பொய்யான தகவலை பரப்பிய 6 பத்திரிகையாளர்கள் மீது தேசத்துரோக வழக்கு.!
டெல்லி கலவரம்.. பொய்யான தகவலை பரப்பிய 6 பத்திரிகையாளர்கள் மீது தேசத்துரோக வழக்கு.!

டெல்லியில் குடியரசு தினவிழாவின்போது விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட கலவரம் பற்றி பொய்யான தகவல்களை பரப்பிய 6 பத்திரிகையாளர்கள் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் கடந்த 26ம் தேதி குடியரசு தினவிழா கொண்டாடப்படும் நேரத்தில் விவசாயிகள் ஒரு பக்கம் டிராக்டர் பேரணி நடத்தினார்கள். அப்பேரணி மிகப்பெரிய வன்முறையாக மாறியது. இந்த தகவல்களை டெல்லியில் உள்ள பத்திரிகையாளர்கள் நாட்ட மக்களிடம் தெரிவிக்கும்போது உண்மைக்கு மாறான தகவல்களை தெரிவித்து வந்தனர். இதனால் நாட்டு மக்களுக்கு பொய்யான தகவல்கள் சென்று சேர்ந்தன.
டெல்லி செங்கோட்டையில் நமது தேசியக்கொடியை அகற்றிவிட்டு, பிரிவினைவாதிகளின் கொடி ஏற்றப்பட்டது. இது போன்ற நிகழ்வுகளை பத்திரிகையாளர்கள் கண்டித்து செய்தி வெளியிடாமல் அந்த பிரிவினைவாதிகளுக்கு ஆதரவான கருத்துக்களை வெளியிட்டு வந்தனர்.
இந்நிலையில், பேரணியின்போது ஒரு விவசாயி உயிரிழந்தது பற்றி வதந்திகளை சமூக வலைதளங்களில் பரப்பியதாக பத்திரிகையாளர்கள் மிரினல் பாண்டே, ராஜ்தீப் சர்தேசாய், வினோத் ஜோஸ், ஜாபர் அகா, பரேஷ் நாத், ஆனந்த் நாத் ஆகியோர் மீது உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், இவர்கள் மீது தேசத் துரோகம், குற்றச் சதி, மக்களிடம் மோதலைத் தூண்டும் வகையில் கருத்துக்களை பதிவிட்டுள்ளதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சில நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.