இயல்பு நிலைக்கு திரும்பிய டெல்லி: உடற்பயிற்சி கூடங்கள், மால்கள் திறப்பு.!
உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலையால் பல கோடி மக்கள் பாதிக்கப்ப்டடனர். அதிகமான பாதிப்பை இந்தியா சந்தித்து. அதிலும் டெல்லியில் மிகப்பெரிய உயிரிழப்புகளும் நிகழ்ந்தது.

By : Thangavelu
கொரோனா வைரஸ் தொற்று பரவல் குறைந்ததை தொடர்ந்து தலைநகர் டெல்லியில், சந்தைகள் மற்றும் மால்கள், உடற்பயிற்சி கூடங்கள் திறக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் சமூக இடைவெளியுடன் ஷாப்பிங் செய்ய தொடங்கியுள்ளனர்.
உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலையால் பல கோடி மக்கள் பாதிக்கப்ப்டடனர். அதிகமான பாதிப்பை இந்தியா சந்தித்து. அதிலும் டெல்லியில் மிகப்பெரிய உயிரிழப்புகளும் நிகழ்ந்தது.
இதன் பின்னர் மத்திய, மாநில அரசுகள் எடுத்த முயற்சியால் டெல்லியில் கொரோனா தொற்று பரவல் வேகமாக குறைந்து வந்தது. இதற்காக முழு ஊரடங்கு விதிக்கப்பட்டது. மக்கள் முழுமையாக கடைப்பிடித்த காரணத்தினால் தொற்றின் வேகம் குறைந்தது. இதனிடையே தளர்வுகள் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், டெல்லியில் சந்தைகள், மால்கள், உடற்பயிற்சி கூடங்கள் திறக்கப்பட்டதால் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. மக்கள் கடைகள், உடற்பயிற்சி கூடங்களுக்கு சென்று வருகின்றனர்.