Kathir News
Begin typing your search above and press return to search.

டெல்லியில் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து.. உயிரிழப்புகளை தடுத்த போலீசார்.!

கொரோனா தொற்றை தவிர்ப்பதற்காக நாடு முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ரயில் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனையடுத்து அத்தியாவசிய பொருட்களை எடுத்து செல்வதற்கு மட்டும் சரக்கு ரயில்கள் இயக்கப்பட்டது.

டெல்லியில் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து.. உயிரிழப்புகளை தடுத்த போலீசார்.!
X

ThangaveluBy : Thangavelu

  |  13 March 2021 5:05 PM IST

கொரோனா தொற்றை தவிர்ப்பதற்காக நாடு முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ரயில் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனையடுத்து அத்தியாவசிய பொருட்களை எடுத்து செல்வதற்கு மட்டும் சரக்கு ரயில்கள் இயக்கப்பட்டது.

இதனிடையே புலம்பெயர்ந்த பயணிகளை மீட்பதற்காக சில பயணிகள் ரயிலும் இயக்கப்பட்டது. நாடு முழுவதும் கொரோனா தொற்று கட்டுக்குள் வரும் நிலையில், பல்வேறு தடங்களில் பயணிகள் ரயில் அதிகளவு இயக்கப்படுகிறது.

இந்நிலையில், டெல்லியில் இருந்து டேராடூன் சென்ற சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் கன்ஸ்ரூ பகுதயில் சென்று கொண்டிருந்தபோது திடீரென்று சி4 பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டது. இதனை உணர்ந்த பயணிகள் அலறியடித்துள்ளனர். இதனிடையே ரயில் அவசரமாக அதே இடத்தில் நிறுத்தப்பட்டு அனைத்து பயணிகளையும் பாதுகாப்பாக ரயில்வே காவல்துறையினர் இறக்கிவிட்டனர். இதன் பின்னர் ரயிலில் உள்ள தீயை அணைக்கும் பணிகள் நடந்தன.

இந்த விபத்து தொடர்பாக உத்தரகாண்ட் டிஜிபி அசோக்குமார் பேசும்போது, மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உயிர் சேதாரம் இன்றி அனைத்து பயணிகளையும் தக்க சயத்தில் ரயில்வே படையினர் காப்பாற்றியுள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News