Kathir News
Begin typing your search above and press return to search.

டெல்லியில் டெல்டா வகை கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: சுகாதாரத்துறை தகவல் !

இந்தியாவில் குறிப்பாக டெல்லியில் கடந்த 3 மாதங்களில் 80% பேருக்கு டெல்டா வகை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

டெல்லியில் டெல்டா வகை கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: சுகாதாரத்துறை தகவல் !
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  10 Aug 2021 1:14 PM GMT

முதல் முதலாக சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொடர்ந்து மாறுபாடு அடைந்து வருகிறது. குறிப்பாக மற்ற கொரோனா வைரஸ்களைவிட உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் மக்களிடம் அதிக அளவில் பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. இதில் சமீபத்திய மாற்றம் அடைந்த டெல்டா மற்றும் டெல்டா பிளஸ் போன்ற தொற்றுகள் உலகம் முழுவதும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. இதை கட்டுப்படுத்தும் பணிகளில் உலக நாடுகள் முழு மூச்சுடன் ஈடுபட்டு வருகின்றன. பல நாடுகள் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ்களுக்கு எதிரான தடுப்பு ஊசிகளை கண்டுபிடிப்பது தொடர்பான ஆய்வுகளை நடத்தி வருகிறார்கள்.


இந்நிலையில் டெல்டா மாறுபாட்டை விட அதிக வீரியம் மற்றும் ஆபத்து நிறைந்த மற்றொரு மாறுபாடு விரைவில் ஏற்படலாம் என்று உலக சுகாதார அமைப்பு(WHO) எச்சரிக்கை விடுத்துள்ளது. மற்ற வகைகளைக் காட்டிலும் டெல்டா வகை அதி விரைவாக தாக்கக் கூடியது என்றும், அனைத்து நாடுகளிலும் இன்னும் சில மாதங்களில் பெருமளவு ஆதிக்கம் செலுத்தப் போவதாகவும் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்பொழுது இந்தியாவில் குறிப்பாக டெல்லியில் கடந்த 3 மாதங்களில் 80% பேருக்கு டெல்டா வகை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.


இது குறித்து மாநில சுகாதாரத் துறை கூறுகையில், டெல்லியில் கடந்த ஜூலை மாதம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 83.3% பேருக்கு டெல்டா வகை கொரோனா உறுதி செய்யப்பட்டது. ஏப்ரல் மாதத்தில் 53.9% பேருக்கும், மே மாதத்தில் 81.7% பேருக்கும், ஜூன் மாதத்தில் 88.6 சதவிகிதத்தினருக்கும் டெல்டா வகை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. எனவே ஒவ்வொரு மாதமும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. இந்த விவரங்களின் படி, 5,752 பரிசோதனை மாதிரிகளில் 1,689 பேருக்கு டெல்டா வகை கொரோனா கண்டறியப்படுகிறது. இதேபோன்று 947 பேருக்கு ஆல்பா வகை கொரோனா தொற்றும் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Input: https://www.hindustantimes.com/india-news/delhi-covid-19-delta-variant-detected-in-80-samples-sent-for-genome-sequencing-101628592357477.html

Image courtesy: hindustan news


Next Story
கதிர் தொகுப்பு
Trending News