Kathir News
Begin typing your search above and press return to search.

அக்.2ம் தேதிக்குள் இந்தியாவை இந்து நாடாக அறிவிக்க வேண்டும்! இல்லை என்றால் ஜலசமாதி அடைவேன்! அயோத்தி சாது எச்சரிக்கை!

இந்தியாவை இந்து நாடாக அறிவிக்க வேண்டும், அப்படி இல்லை என்றால் ஜலசமாதி அடைவேன் என்று ஜகத்குரு பரமஹன்ஸ் ஆச்சார்ய மஹாராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அக்.2ம் தேதிக்குள் இந்தியாவை இந்து நாடாக அறிவிக்க வேண்டும்! இல்லை என்றால் ஜலசமாதி அடைவேன்! அயோத்தி சாது எச்சரிக்கை!
X

ThangaveluBy : Thangavelu

  |  29 Sept 2021 9:00 AM

இந்தியாவை இந்து நாடாக அறிவிக்க வேண்டும், அப்படி இல்லை என்றால் ஜலசமாதி அடைவேன் என்று ஜகத்குரு பரமஹன்ஸ் ஆச்சார்ய மஹாராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள தபஸ்வீ மடத்தின் சாதுவாக இருப்பவர் மஹந்த பரமஹன்ஸ் தாஸ் எச்சரிக்கை செய்துள்ளார். இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்று சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை நடத்தியவர்.


இதனால் இவர் இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமானார். இதனிடையே கடந்த ஆண்டு மீண்டும் ஒரு உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினார். அயோத்தியில் உள்ள ராம் ஜானகி கோயில் முன்பாக அமர்ந்து இந்தியாவை இந்து நாடாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதற்காக அவர் 15 நாட்கள் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தார். இதனை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சாதுவை சந்தித்து சமாதானம் செய்தார். இதன் பின்னர்தான் அவர் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்.

இந்நிலையில், தனியார் செய்தி ஏஜென்சியான ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில், அக்டோபர் 2ம் தேதிக்குள் இந்தியாவை இந்து நாடாக அறிவிக்க வேண்டும். அது போன்று அறிவிக்காவிடில் நான் சரயு நதியில் ஜல சமாதி அடைவேன் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். அது மட்டுமின்றி பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களின் தேசியக் குடியுரிமையை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார். இவரது பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Source, Image Courtesy: ANI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News