ஜனநாயக நாடு.. கனடா பிரதமர் கருத்து தேவையற்றது.. இந்திய வெளியுறவுத்துறை.!
ஜனநாயக நாடு.. கனடா பிரதமர் கருத்து தேவையற்றது.. இந்திய வெளியுறவுத்துறை.!
By : Kathir Webdesk
டெல்லியில் பஞ்சாப், மற்றும் அரியானா மாநிலங்களில் இருந்து விவசாயிகள் டெல்லியில் கடந்த சில நாட்களாக போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதற்கு கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ ஆதரவு தெரிவித்து கருத்து பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், விவசாயிகள் போராட்டத்திற்கு கனடா பிரதமர் ஆதரவு தெரிவித்த நிலையில் இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் அவரது கருத்து தேவையற்றது என இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து பல்வேறு விவசாய சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த 6 நாட்களாக டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தை எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு தூண்டி விடுகிறது என்று பிரதமர் மற்றும் பாஜக தலைவர்கள் குற்றம் சாட்டி வந்தனர்.
இந்நிலையில், காணொலி வாயிலாக குருநானக் ஜெயந்தி வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்ட கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவட்சா விவசாயிகள் போராட்டம் தொடர்பாக கனடா பிரதமர் தெரிவித்த தவறான கருத்துக்களைக் கண்டோம். ஒரு ஜனநாயக நாட்டின் உள்விவகாரங்களில் இதுபோன்ற கருத்துகள் தேவையற்றது என்று கூறியுள்ளார்.