Begin typing your search above and press return to search.
குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னாள் தடுப்புகளை உடைத்து டிராக்டர் பேரணியைத் தொடங்கிய ஆர்ப்பாட்டக்காரர்கள்!
குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னாள் தடுப்புகளை உடைத்து டிராக்டர் பேரணியைத் தொடங்கிய ஆர்ப்பாட்டக்காரர்கள்!

By : Saffron Mom
தற்போது வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்திவரும் விவசாயிகள் குடியரசு தினத்தில் டிராக்டர் பேரணி நடத்தக் கோரிக்கை விடுத்திருந்தனர். அதனை அடுத்து அதற்கான உத்தரவும் வழங்கப்பட்டது. தற்போது சிங்கு எல்லையில் தமாஷா பகுதியில் நிலைமை மோசம் அடைந்துள்ளதாகத் தெரிகின்றது. அங்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் காவல்துறை தடுப்புகளை உடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை அன்று டெல்லி காவல்துறை போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு டிராக்டர் பேரணி நடத்த உத்தரவு அளித்ததது. மேலும் குடியரசு தினத்தில் ராஜ்பாத் பவனில் அணிவகுப்பு மரியாதையை முடிந்தவுடன் பேரணி நடத்த உத்தரவளித்தது. மேலும் அவர்களுக்கு மூன்று பாதைகள் வழியாக வரவும் அனுமதி அளிக்கப்பட்டது.
#WATCH Protesting farmers break police barricading at Delhi-Haryana Tikri border
— ANI (@ANI) January 26, 2021
Farmers are holding tractor rally today in protest against Centre's three Farm Laws#RepublicDay pic.twitter.com/3tI7uKSSRM
மேலும் அந்த உத்தரவில், "அவர்கள் இருசக்கர வாகனம், மாட்டு வண்டி, JCB போன்ற வாகனங்களைப் பயன்படுத்தவும் அனுமதி மறுக்கப்பட்டது. மேலும் பேரணி நடத்துபவர்கள் போதைப் பொருட்களை உட்கொண்டு எந்தவித ஒழுங்கற்ற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்றும் உத்தரவு அளிக்கப்பட்டது. ஆயுதங்கள், கத்தி, லத்திகள் மற்றும் மதம் சார்ந்த குறியீடுகளைக் கொண்டு செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது."
Farmers break police barricading at Delhi-Haryana Tikri border. Thousands are on tractors, lakhs are walking to delhi for Tractor Prade. #FarmersProstests #26JanDelhiTractorParade @Kisanektamorcha pic.twitter.com/PJjHnYLyjg
— Harsimran Singh ਹਰਸਿਮਰਨ ਸਿੰਘ (@harsimrans307) January 26, 2021
Farmers' #RepublicDay tractor rally in protest against the three farm laws begins at Delhi's Dhansa border pic.twitter.com/gZXfHSXhTl
— ANI (@ANI) January 26, 2021
ஆனால் இந்த அனைத்து உத்தரவுகளையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட நேரத்திற்கு முன்னேரே காவல்துறை தடுப்புகளை உடைத்து டிராக்டர் பேரணியை மேற்கொண்டுள்ளனர். மேலும் வெளியிடப்பட்டுள்ள போராட்டம் நடத்தும் விவசாயிகள் காவல் தடுப்புகளை உடைத்துச் செல்லுகின்றனர். மேலும் நிலைமையை இன்னும் மோசமடைய செய்யும் வகையில் அவர்கள் லத்திகள் முதலியவற்றையும் ஏந்தி செல்லுகின்றனர்.

மேலும் இந்த டிராக்டர் பேரணியின் முக்கிய நோக்கமானது தற்போது வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடந்துவரும் ஒரு போராட்டத்தில் மத்திய அரசாங்கத்துடன் ஒரு மோதலை உண்டாக்குவது ஆகும். இந்த வேளாண் சட்டங்கள் நாட்டில் பல்வேறு விவசாயிகளிடம் வரவேற்புகளைப் பெற்றுள்ளது மற்றும் இந்த சட்டங்கள் பல ஆண்டுகளாக நிபுணர் குழுக்களுடன் கலந்துரையாடிக் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனாலும் எதிர்க்கட்சிகள் இதனை அரசியல் மயமாக்கி எதிர்ப்புகளைத் தூண்டி வருகின்றனர்.
Next Story
