Kathir News
Begin typing your search above and press return to search.

பிரதமரின் மத்ஸ்ய சம்பதா திட்டத்தின் கீழ் ரூ.1,723 கோடி மதிப்பிலானத் திட்டங்கள் - அதிரடி காட்டும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்!

Department of Fisheries has approved Rs 1,723 crore worth proposals

பிரதமரின் மத்ஸ்ய சம்பதா திட்டத்தின் கீழ் ரூ.1,723 கோடி மதிப்பிலானத் திட்டங்கள் - அதிரடி காட்டும் மத்திய இணையமைச்சர்  எல்.முருகன்!
X

MuruganandhamBy : Muruganandham

  |  18 Oct 2021 2:24 AM GMT

Pradhan Mantri Matsya Sampada Yojana (PMMSY) எனப்படும் பிரதமரின் மத்ஸ்ய சம்பதா திட்டத்தின் கீழ் ரூ.1,723 கோடி மதிப்பிலானத் திட்டங்களுக்கு மீன்வளத்துறை அனுமதி அளித்துள்ளதாக மத்திய இணையமைச்சர் எல் முருகன் கூறியுள்ளார். 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேங்களில் இத்திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ளது.





கர்நாடக மாநிலம் மங்களூரு மற்றும் உடுப்பியில் 2 நாள் அரசு முறைப் பயணம் மேற்கொண்ட அமைச்சர், மங்களூருவில் உள்ள பைக்கம்பாடியில் ஐஸ் ஆலையை அவர் பார்வையிட்டார். PMMSYதிட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு குளிர்சாதன மற்றும் வெப்பப் பாதுகாப்பு வாகனங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்குவதற்கான அனுமதி உத்தரவை வழங்கும் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார்.



குலாய் பகுதியில் உள்ள மிகப்பெரிய குளிர்பதனக் கிடங்கு, தண்ணீர் பாவியில் உள்ள மிதவை கூண்டு மீன் வளர்ப்பு மையங்கள் ஆகியவற்றையும் முருகன் பார்வையிட்டார். பிரதமரின் மத்ஸ்ய சம்பதா திட்டப் பயனாளிகள் மற்றும் மோட்டார் படகு உரிமையாளர்களுடன் அவர் கலந்துரையாடினார். மால்பே மீன்பிடித் துறைமுகத்தை பார்வையிட்ட அவர், உடுப்பியில் மீனவர்களுடன் கலந்துரையாடினார்.

இந்நிகழ்ச்சியில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய இணையமைச்சர் எல். முருகன், பிரதமரின் மத்ஸ்ய சம்பதா திட்டம் குறித்தும், இத்திட்டம் கடலோரப் பகுதி மக்களை சென்றடைந்துள்ளது குறித்தும் விளக்கினார்.

திட்டத்தின் நோக்கம்:


பிரதமரின் மத்ஸ்ய சம்பதா திட்டம், பகுதிகள் அடிப்படையிலான அணுகுமுறையில் முக்கியமாக கவனம் செலுத்தி, மீன்பிடித் தொகுப்புகளை உருவாக்குகிறது. இத்திட்டத்தில் கடற்பாசி வளர்ப்பு மற்றும் அழகு மீன்கள் வளர்ப்பு போன்ற வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் சிறப்புக் கவனம் செலுத்தப்படும். தரமான இனப்பெருக்கம், முட்டைகள் மற்றும் தீவனம், இனங்களை பல்வகைப்படுத்தல், முக்கிய உள்கட்டமைப்பு, சந்தைப்படுத்தல் நெட்வொர்க் அமைப்பு போன்றவற்றில் இத்திட்டம் சிறப்புக் கவனம் செலுத்துகிறது.

தற்போதுவரை பிரதமரின் மத்ஸ்ய சம்பதா திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக மீன்வளத்துறை 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேங்களில் ரூ.1,723 கோடி மதிப்பிலானத் திட்டங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் வருமானத்தை உருவாக்கும் நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது


Next Story
கதிர் தொகுப்பு
Trending News