எந்த ஆட்சியிலும், காஷ்மீர் இந்தகைய வளர்ச்சியை கண்டதில்லை - வெறும் இரண்டே ஆண்டுகளில் இவ்வளோ நடந்திருக்கு !
Development of Jammu and Kashmir will take placenow together with rest of India and both will make effort to take Nation forward
By : Muruganandham
பல ஆண்டுகளாக அமலில் இருந்த 370 மற்றும் 35 ஏ சட்டப்பிரிவை முடிவுக்கு கொண்டு வரும் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி எடுத்தார். இதன் மூலம் லட்சக்கணக்கான ஜம்மு காஷ்மீர் மக்கள் தங்கள் உரிமைகளைப் பெற்றனர். காஷ்மீர் பெண்களுக்கும் உரிமைகள் வழங்கப்பட்டன.
தற்போது காஷ்மீரில் பல வளர்ச்சித் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. 7 புதிய மருத்துவக் கல்லூரிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 2,000 மாணவர்கள் எம்பிபிஎஸ் படிக்கின்றனர். ஜம்மு காஷ்மீரின் ஏழை மக்களுக்கு சேவை செய்ய 45,000 இளைஞர்கள் ஈடுபடுத்தப்பட்டால், தீவிரவாதிகளால் எந்தத் தீங்கும் செய்ய முடியாது.
ஜம்மு காஷ்மீர் தேர்வு வாரியத்துக்கு 25,000 அரசு வேலைகள் வழங்கப்பட்டுள்ளன. இவர்களில் 7,000 பேருக்கு நியமனக் கடிதம் வழங்கப்பட்டுள்ளன. முதலீடுகள் இங்கு 5 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கும். இது வரை ஜம்முவில் ரூ.7,000 கோடி முதலீட்டுக்கு நிலம் வழங்கப்பட்டுள்ளது. காஷ்மீரில் ரூ.5,000 கோடி முதலீட்டுக்கு நிலம் வழங்கப்பட்டுள்ளது. 2022ம் ஆண்டுக்கு முன்பாக, ரூ.51,000 கோடி முதலீடு பெறப்படும்.
பிரதமர் நரேந்திர மோடி பதவி ஏற்றதும் ரூ.55,000 கோடி நிதியுதவி வழங்கினார். இதன் மூலம் 21 திட்டங்களுக்கு ரூ.35,000 கோடி செலவழிக்கப்பட்டு நிறைவு செய்யப்பட்டுள்ளன. ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில் ரூ.700 கோடி மதிப்பில் மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கப்படவுள்ளன.
ஜம்மு காஷ்மீர் கிராமங்களுக்கு மின்சாரம் வழங்க நீர்மின் நிலைய திட்டங்களுக்கு ரூ.35,000 கோடியை நரேந்திர மோடி அரசு செலவு செய்துள்ளது.மேலும் ஜம்முவில் ரூ.210 கோடி செலவில், ஐஐடி புதிய வளாகம் கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.