Kathir News
Begin typing your search above and press return to search.

பிரதமர் மோடிக்கு டாக்சி அனுப்பியதா இத்தாலி அரசு? போலி புகைப்படத்தை பரப்பும் எதிர்க்கட்சியினர்!

ஜி20 மாநாட்டில் பங்கேற்க இத்தாலி தலைநகர் ரோம் சென்ற இந்திய பிரதமர் மோடி, வாடிகன் நகரத்ல் போப்பை சந்தித்தார். அப்போது அவர் பயணம் செய்ய டாக்சி அனுப்ப்பட்டதாக போலியான புகைப்படத்தை எதிர்க்கட்சியினர் இணையத்தில் பரப்பி வருகின்றனர்.

பிரதமர் மோடிக்கு டாக்சி அனுப்பியதா இத்தாலி அரசு? போலி புகைப்படத்தை பரப்பும் எதிர்க்கட்சியினர்!
X

ThangaveluBy : Thangavelu

  |  1 Nov 2021 3:35 AM GMT

ஜி20 மாநாட்டில் பங்கேற்க இத்தாலி தலைநகர் ரோம் சென்ற இந்திய பிரதமர் மோடி, வாடிகன் நகரத்ல் போப்பை சந்தித்தார். அப்போது அவர் பயணம் செய்ய டாக்சி அனுப்ப்பட்டதாக போலியான புகைப்படத்தை எதிர்க்கட்சியினர் இணையத்தில் பரப்பி வருகின்றனர்.

இந்தியாவில் மட்டுமின்ற உலகளவில் சமூக ஊடகங்களில் அதிகமான செய்திகளில் போலியாக பரப்பும் செய்திகளே அதிகம். அதே போன்று இந்தியாவிலும் எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் மற்றும் சின்ன சின்ன துக்கடா கட்சிகளும் இணைந்து கொண்டு பிரதமர் மோடிக்கு எதிராக போலியான செய்திகளை அடிக்கடி சமூக ஊடகங்களில் பரப்பி வருவது வாடிக்கை.


இந்நிலையில், பிரதமர் மோடி கடந்த வெள்ளிக்கிழமை (அக்டோபர் 29) வாடிகன் நகரத்தில் போப் பிரான்சிஸ்ஸை சந்திக்க சென்றார். அவருடன் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும் சென்றிருந்தார். இதனிடையே பிரதமர் மோடியும், போப்பும் சுமார் ஒரு மணி நேரம் காலநிலை மாற்றம் வறுமை உள்ளிட்ட விஷயங்கள் பற்றி பேசினர். போப்பை இந்தியாவுக்கு வருமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். அதனை மிகவும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்ட போப் சிறந்த பரிசு எனவும் கூறியிருந்தார்.


இதனிடையே வாடிகனுக்கு பிரதமர் மோடி சென்ற காரின் புகைப்படங்களை போட்டோஷாப் செய்து டாக்சி போன்று துக்கடா கட்சிகளும் பெரிய கட்சியினரும் சித்தரித்தது. அதாவது இத்தாலியில் பிரதமர் மோடிக்கு கிடைத்த மரியாதை இவ்வளவுதான் என்றும் பதிவிட்டனர். இது உண்மை செய்தி என்று எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் தங்கள் சமூக ஊடகங்கள் வாயிலாக பரப்பினர். ஆனால் இதற்கு ஏஎன்ஐ செய்தி நிறுவனம் உண்மையான புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிட்டுள்ளது. பிரதமர் பயணம் செய்த காரின் முன் மற்றும் பின்புறத்திலும் டாக்சி என்ற வாசகம் எதுவும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளது. உண்மை என்னவென்று தெரியாமலேயே சிலர் வதந்திகளை பரப்பி வருகின்றனர் குறிப்பிடத்தக்கது.

Source: Dinamalar

Image Courtesy:ANI


Next Story
கதிர் தொகுப்பு
Trending News