கூடுதலாக மது கேட்டு தரவில்லை.. மணமகனை கத்தியால் குத்திய நண்பர்கள்.!
கூடுதலாக மது கேட்டு தரவில்லை.. மணமகனை கத்தியால் குத்திய நண்பர்கள்.!
By : Kathir Webdesk
உத்தரப்பிரதேசத்தில் திருமணம் நடந்த சில மணி நேரங்களில் மணமகன் அவரது சகோதரர்களால் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம், பாலிமுகிம் புர் கிராமத்தில் திங்கட்கிழமை இரவு 28 வயதான பப்லு தனது திருமணத்திற்குப் பிறகு நண்பர்களைச் சந்திக்கச் சென்றுள்ளார். அப்போது அவரது நண்பர்கள் கூடுதலாக மது ஊற்றச் கேட்டுள்ளனர். ஆனால் பப்லு தர மறுத்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த நண்பர்கள் பப்லுவை கத்தியால் குத்தியுள்ளனர்.
இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதில் குற்றம் சாட்டப்பட்ட ராம்கலாடி என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், 5 பேரிடம் போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணம் முடிந்த சில மணி நேரங்களிலேயே மணமகன் இறந்ததால் மணப்பெண் கதறி அழுத காட்சி அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.