மாற்றுத்திறனாளிகள் எளிதாக தடுப்பூசி எடுத்துக்கொள்ள மத்திய அரசு எடுக்கும் சிறப்பான நடவடிக்கை !
அனைத்து தரப்பு மக்களும் தடுப்பு சிகிச்சை எடுத்துக்கொள்ளவேண்டும் என்று பல்வேறு யுக்திகளை அமல்படுத்தி வருகிறது.
By : Dhivakar
இந்த கொரோணா பெரும் தொற்றிலிருந்து நம்மை காத்துக் கொள்ள தடுப்பூசி செலுத்துவது ஒரு முக்கிய அரணாகும். அந்த வகையில் மத்திய அரசு பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து மக்களுக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்தி வருகிறது. அனைத்து தரப்பு மக்களும் தடுப்பு சிகிச்சை எடுத்துக்கொள்ளவேண்டும் என்று பல்வேறு யுக்திகளை அமல்படுத்தி வருகிறது.
அந்தவகையில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் தடுப்பூசி மையங்களுக்கு வர இயலாதவர்களுக்கு வீடு தேடி வந்து தடுப்பூசி செலுத்தப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சுகாதாரத்துறை அதிகாரிகள் வியாழக்கிழமையன்று செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது :
"தினசரி பாதிப்பு எண்ணிக்கைகள் குறைந்து வந்தாலும் நாடு என்னும் இரண்டாம் நிலையில் தான் உள்ளது. கடந்த வாரம் மொத்த பாதிப்பில் 62.3 சதவீதம் பாதிப்புகள் கேரளத்தில் மட்டும் பதிவாகியுள்ளன கேரளத்தில் மட்டும்தான் நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் மேல் உள்ளது.
வாராந்திர தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் முப்பத்தி மூன்று மாவட்டங்களில் 10 சதவீதத்திற்கும் மேல் உள்ள 23 மாவட்டங்களில் 5-10 சதவிகிதத்துக்கு இடையே பதிவாகியுள்ளது வரவிருக்கும் பண்டிகை காலத்தில் ஒரு வழிகாட்டு நெறிமுறைகளில் கட்டுப்பாட்டுப் பகுதிகள் மட்டும் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 5 சதவிகிதத்திற்கு மேல் இருக்கும் மாவட்டங்களில் மக்கள் பெருமளவில் கூடுவதை தவிர்க்க வேண்டும்.
நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்ட 66 சதவிகிதத்தினருக்கு குறைந்தபட்சம் முதல் தவணை தடுப்பூசி எழுதப்பட்டுள்ளன 23 சதவீதத்தினர் இரண்டு தடுப்பூசியும் செலுத்திக் கொண்டனர். தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை மேலும் துரிதப்படுத்த மாற்றுத்திறனாளிகள் மட்டும் தற்போது சேவை மையங்களுக்கு வர இயலாதவர்களுக்கு வீடு தேடி வந்து தடுப்பூசி செலுத்தப்படும்" என்று அதிகாரிகள் செய்தியாளர்களை சந்தித்து கூறினர்.
Image : Hindustan Times, Indian Express