2023-ம் ஆண்டு குடியரசு தின அணிவகுப்பு: 23 அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!
2023-ம் ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில் 23 அலங்கார ஊர்திகளும் பங்கேற்கின்றன.
By : Bharathi Latha
2023 ஜனவரி 26 அன்று நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் நாட்டின் வளமான கலாச்சார பாரம்பரியம், பொருளாதார முன்னேற்றம் மற்றும் வலுவான பாதுகாப்பு ஆகியவற்றை சித்தரிக்கும் 23 அலங்கார ஊர்திகள் இடம்பெறுகின்றன. 17 ஊர்திகள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்தும், பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் சார்பில் 6 ஊர்திகளும் இந்த அணிவகுப்பில் இடம்பெறுகின்றன. அசாம், அருணாச்சலப் பிரதேசம், திரிபுரா, மேற்கு வங்கம், ஜம்மு - காஷ்மீர், லடாக், குஜராத், ஹரியானா, உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் 17 அலங்கார ஊர்திகள், நாட்டின் புவியியல் மற்றும் வளமான கலாச்சார பன்முகத்தன்மையை சித்தரிக்கும் வகையில் குடியரசு தின அணிவகுப்பின் போது காட்சிப்படுத்தப்படும்.
கலாச்சார அமைச்சகம், உள்துறை அமைச்சகத்தின் மத்திய ஆயுதக் காவல் படைகள், உள்துறை அமைச்சகத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் மத்திய பொதுப்பணித் துறை, பழங்குடியினர் நல அமைச்சகம், வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சில் ஆகியவை சார்பில் 6 அலங்கார ஊர்திகளும் குடியரசு தின அணிவகுப்பில் இடம்பெறும். இவை கடந்த சில ஆண்டுகளில் செய்த பணிகள் மற்றும் சாதனைகள் அந்தந்த அலங்கார ஊர்திகளில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.
பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து அலங்கார ஊர்திகள் தொடர்பாக பெறப்பட்ட முன்மொழிவுகளை நிபுணர் குழு ஆய்வு செய்தது. அலங்கார உறுதியின் கருப்பொருள், விளக்கக்காட்சி, அழகியல் மற்றும் தொழில்நுட்பக் கூறுகள் குறித்து மாநிலங்களின் பிரதிநிதிகளுடன், நிபுணர் குழு உறுப்பினர்கள் பல சுற்று கலந்துரையாடல்களை மேற்கொண்டு ஆய்வு செய்து, அதன் அடிப்படையில், குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கும் அலங்கார ஊர்திகளின் தேர்வு நடைமுறை மேற்கொள்ளப் பட்டது.
Input & Image courtesy: PIB