Kathir News
Begin typing your search above and press return to search.

போராட்ட களத்தில் சமூக விரோதிகளை அனுமதிக்காதீர்.. விவசாயிகளுக்கு மத்திய அமைச்சர் வேண்டுகோள்.!

போராட்ட களத்தில் சமூக விரோதிகளை அனுமதிக்காதீர்.. விவசாயிகளுக்கு மத்திய அமைச்சர் வேண்டுகோள்.!

போராட்ட களத்தில் சமூக விரோதிகளை அனுமதிக்காதீர்.. விவசாயிகளுக்கு மத்திய அமைச்சர் வேண்டுகோள்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  12 Dec 2020 7:05 AM GMT

புதியதாக கொண்டு வரப்பட்ட வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டு வருகின்றனர்.

பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் 16-வது நாளாக நேற்றும் தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். சிங்கு, திக்ரி, சில்லா உள்ளிட்ட எல்லைகளை விவசாயிகள் ஆக்கிரமித்து இருப்பதால், அண்டை மாநிலங்களுக்கு செல்லும் போக்குவரத்து முடங்கியுள்ளது.

இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு மத்தியில் அரசு தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. அதில் குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்த எழுத்துப்பூர்வ உறுதிமொழி, மண்டிகள் தொடர்வதற்கான வழிமுறைகள் என பல்வேறு பரிந்துரைகள் அதில் அடங்கியிருந்தன. ஆனால் இந்த யோசனைகளை நிராகரித்த விவசாயிகள், தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக டெல்லி செல்லும் சாலைகள் அனைத்தையும் தடை செய்வதாகவும், ரயில் மறியலில் ஈடுபட உள்ளதாகவும் கூறியுள்ளனர்.

எனினும் இந்த யோசனைகளை பரிசீலிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ள மத்திய அரசு, விவசாயிகளின் கவலைகள் தொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக கூறிவருகிறது.

இந்நிலையில் திக்ரி எல்லையில் போராடி வரும் விவசாயிகளில் ஒரு பகுதியினர் சில கோரிக்கைகள் அடங்கிய அட்டைகளை ஏந்தியிருந்தனர். அந்த பாதாகைகளில் பல்வேறு குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டிருக்கும் சமூக விரோதிகளை விடுவிக்குமாறு அதில் குறிப்பிட்டிருந்தனர். இதனையடுத்து விவசாயிகள் தங்கள் தளத்தை சமூக விரோதிகள் பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம் எனவும் மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது பற்றி செய்திகளை வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், தமது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். விவசாயிகள் என்ற போர்வையில் சமூக விரோதிகள் சிலர் விவசாயிகளின் போராட்ட சூழலை கெடுக்க முயற்சிக்கின்றனர். எனவே அத்தகைய சமூக விரோதிகள் உங்களின் போராட்டக்களத்தை பயன்படுத்த அனுமதிக்காதீர்கள் என்றும், இந்த விவகாரத்தில் விழிப்புடன் இருக்குமாறும் விவசாய சகோதரர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். என்று குறிப்பிட்டுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News