Kathir News
Begin typing your search above and press return to search.

யாரும் நம்ப வேண்டாம்! கொரோனா தடுப்பூசி தொடர்பாக பரவும் தவறான தகவல்!

யாரும் நம்ப வேண்டாம்! கொரோனா தடுப்பூசி தொடர்பாக பரவும் தவறான தகவல்!

யாரும் நம்ப வேண்டாம்! கொரோனா தடுப்பூசி தொடர்பாக பரவும் தவறான தகவல்!
X

Muruganandham MBy : Muruganandham M

  |  22 Jan 2021 12:55 PM IST

ஜனவரி 21ம் தேதி, காலை 7 மணி வரை, 8 லட்சத்துக்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. போலியோ மற்றும் பெரியம்மை போன்றவற்றை மிகப் பெரியளவிலான தடுப்பூசி திட்டம் மூலம்தான் ஒழிக்க முடிந்தது.

தடுப்பூசி ஒரு முறை போட்டுக் கொண்டால், அந்த நபர் நோய் பாதிப்பில் இருந்து தப்புவதோடு, அவரால் மற்றவருக்கு பரவாது. இது சமூக பலனை அளிக்கும். இதனால் தான், 12 நோய்களுக்கு எதிரான இந்திரதனுஷ் தடுப்பூசி திட்டம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு மேற்கொள்ளப்பட்டது. இதேபோல், கொரோனா தடுப்பூசியும், நோய் பரவலை கட்டுப்படுத்தி அதை ஒழிக்கும்.

தடுப்பூசி பற்றிய தவறான பொய் பிரசாரத்துக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். சுகாதாரத்துறை அமைச்சகம், தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், மை கவ் இணையளம் போன்றவற்றிலிருந்து சரியான மற்றும் நம்பகமான தகவல்களை மக்கள் பெற வேண்டும்.

அனைத்து பிரபல மருத்துவமனைகளின் மருத்துவர்களும், தடுப்பூசி போட்டுக் கொண்டு இந்த பணியை பாராட்டியுள்ளனர். அரசியல் நோக்கத்துக்காக, சிலர் மட்டும் தடுப்பூசி பற்றி வதந்திகளை பரப்பி, மக்களின் ஒரு பிரிவினர் இடையே தயக்கத்தை ஏற்படுத்துகின்றனர்.

உலக நாடுகள் இந்த தடுப்பூசிகளை நம்பிடம் கேட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால், நம்மில் சிலர், குறுகிய அரசியல் நோக்கத்துக்காக தவறான தகவலை பரப்புகின்றனர். அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் மற்றும் இதர மருத்துவ பணியாளர்கள், இந்த கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டு, எந்தவித பக்க விளைவுகளும் இல்லாமல் பணிக்கு திரும்பியுள்ளனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News