Kathir News
Begin typing your search above and press return to search.

மின்னல் வேகத்தில் அயோத்தி ராமர் கோவில் கட்டுமான பணிகள் - எவ்வளவு நிறைவடைந்துள்ளது தெரியுமா?

பூமி பூஜையின் இரண்டாம் ஆண்டு நிறைவு. ராமர் கோவிலின் 40 சதவீத கட்டுமான பணி முடிவடைந்தது . அறக்கட்டளை நிர்வாகி பேட்டி

மின்னல் வேகத்தில் அயோத்தி ராமர் கோவில் கட்டுமான பணிகள் - எவ்வளவு நிறைவடைந்துள்ளது தெரியுமா?

KarthigaBy : Karthiga

  |  7 Aug 2022 8:14 AM GMT

அயோத்தி ராமர் கோவிலின்40 சதவீத கட்டுமான பண முடிவடைந்தது என்று ராம ஜென்மபூமி அறக்கட்டளை நிர்வாகி கூறினார்.

அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோவில் கட்ட கடந்த 2019-ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் தேதி சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்தது.

கட்டுமான பணிகளை கவனிக்க ராம ஜென்மபூமி அறக்கட்டளை அமைக்கப்பட்டது. அதை அடுத்து 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி அயோத்தியில் ராமர் கோவில் கட்ட பூமி பூஜை நடந்தது. பிரதமர் மோடி கலந்து கொண்டு பூமி பூஜை நடத்தி வைத்தார். அடிக்கல் நாட்டினார்.இப்பணி முடிவடைந்து 2 ஆண்டுகள் நிறைவடைந்தன.

இதையொட்டி ராம ஜென்மபூமி அறக்கட்டளை பொதுச் செயலாளர் சம்பத் ராய் பேட்டி அளித்தார்.அவர் கூறியதாவது:-

கடந்த இரண்டு ஆண்டுகளாக எவ்வளவோ முட்டுக்கட்டைகளை சந்தித்வோம்.காலம் பெரிய சவாலாக இருந்தது.அதையும் மீறி கட்டுமான பணி தடையின்றி நடந்தது. 40 சதவீத கட்டுமான பணி முடிவடைந்துள்ளது. கோவில் கட்டுமான பணி செலவாக ரூபாய் 11 கோடி நிர்ணயித்து இருந்தோம்.

பூமி பூஜையை தொடர்ந்து வர ஆரம்பித்த நன்கொடை இப்போதும் வந்துகொண்டிருக்கிறது.முன்பு நாள் ஒன்றுக்கு ரூபாய் 12 லட்சம் முதல் 15 லட்சம் வரை வந்தது. தற்போது 35 லட்சம் முதல் 40 லட்சம் வரை வருகிறது.

காசோலை ரொக்கப்பணம் மட்டுமின்றி ஆன்லைன் மூலமாகவும் நன்கொடை வருகிறது. நன்கொடை ரூபாய் 5 ஆயிரம் கோடியை தாண்டிவிட்டது.தங்கம் ,வெள்ளியாகவும் நன்கொடை கிடைக்கிறது. பூஜைக்கு பிறகு பிரபலங்கள் இப்போதும் வந்து ராம ஜென்ம பூமியில் தரிசனம் செய்து வருகிறார்கள்.

பிரதமர் மோடி, உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் மட்டுமின்றி முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பல்வேறு மாநிலங்களின் கவர்னர்கள், முதல்-மந்திரிகள் சினிமா நட்சத்திரங்கள், நேபாளம், இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் வழிபட்டுச் சென்றுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.






Next Story
கதிர் தொகுப்பு
Trending News