Begin typing your search above and press return to search.
இந்தியாவின் மிக நீளமான கடல் பாலம் - எப்போ வருகிறது தெரியுமா?
இந்தியாவில் நீருக்கு மேல் அமைக்கப்பட்டுள்ள டிரான்ஸ் ஹார்பர் லிங்க் பாலம் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை இங்கு காண்போம்.

By :
இந்தியாவில் கடல், ஆறு உட்பட நீருக்கு மேல் அமைக்கப்பட்டுள்ள நீளமான பாலம் மும்பையில் உள்ளது.டிரான்ஸ் ஹார்பர் லிங்க் என்ற பாலம் மும்பை - நவி மும்பை நகரங்களை இணைக்கிறது.பாலமானது 6 வழிச் சாலையாக மொத்தம் 22 கிலோ மீட்டர் நீளம் கொண்டது.
இதில் 16.5 கிலோ மீட்டர் நீளமானது கடலுக்கு மேல் அமைந்துள்ளது. 5.5 கிலோ மீட்டர் தூரம் தரைப்பகுதியிலும் கட்டப்படுகிறது.பாலத்தின் அகலம் 89 அடி, உயரம் 82 அடி .கான்கிரீட், இரும்பு கொண்டு அமைக்கப்படுகிறது. இந்தாண்டு இறுதியில் போக்குவரத்துக்கு திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த பாலத்தில் தினசரி 70 ஆயிரம் வாகனங்கள் வரை செல்ல முடியும்.
Next Story