Kathir News
Begin typing your search above and press return to search.

சுமார் ரூ600 கோடியை எட்டிய அயோத்தி ராமர் கோயில் கட்டுமானத்திற்கான நன்கொடை வசூல்!

சுமார் ரூ600 கோடியை எட்டிய அயோத்தி ராமர் கோயில் கட்டுமானத்திற்கான நன்கொடை வசூல்!

சுமார் ரூ600 கோடியை எட்டிய அயோத்தி ராமர் கோயில் கட்டுமானத்திற்கான நன்கொடை வசூல்!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  9 Feb 2021 4:22 PM GMT

அயோத்தி ராமர் கோயில் கட்டுவதற்கான நன்கொடையை தொடங்கிய 20 நாட்களுக்குள், சுமார் நன்கொடை தொகையானது ரூபாய் 600 கோடியை தாண்டிவிட்டது. ராமர் கோயிலை கட்டுவதற்கான பொறுப்பை ஏற்றுள்ள ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா தனது நன்கொடை திரட்டும் பணியை கடந்த ஜனவரி மாதம் 15ஆம் தேதி தொடங்கியது. அதிலிருந்து இன்று வரை சுமார் ரூ. 600 கோடி வசூலாகியுள்ளது.

மேலும் இந்த நிதி திரட்டும் பணியானது வரும் பிப்ரவரி 27ஆம் தேதி வரை நடைபெறும் என்று கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி திங்களன்று ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் அறங்காவலர் கூறுகையில், "நன்கொடை திரட்டுவதற்கான திரட்டுவதற்கான பிரச்சாரம் இன்னும் 19 நாட்களில் அதிக வேகத்தை பெறும்" என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் அயோத்தி கோவில் கட்டுவதற்காக, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள் ரூ. 5,00,100 பங்களித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அயோத்தியில் ஒரு பிரம்மாண்டமான ராமர் கோயில் கட்டுவதற்கான பிரச்சாரத்தில் அனைத்துத் தரப்பு மக்களும் தீவிரமாக பங்களிப்பு செய்து வருகின்றனர் என்பது பாராட்ட வேண்டிய ஒரு விஷயம்.

இந்த முயற்சியில் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 12 கோடி இந்து குடும்பங்களைச் சேர்ந்த 55 கோடி குடும்ப உறுப்பினர்களை இந்த பணியில் ஈடுபடுத்த அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது. பண்டைய நகரமான அயோத்தியில் ராமர் கோயிலின் பிரமாண்டமான கட்டுமானத்திற்கு சுமார் 1,100 கோடி ரூபாய் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இதில் சுமார் 300-400 கோடி ரூபாய் கோவிலின் உள்கட்டமைப்பு கட்ட செலவாகும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. அயோத்தியில் உள்ள ராம் கோயிலுக்கு நிதி வசூலிப்பதற்காக ஐந்து லட்சம் கிராமங்களையும் பத்து கோடி குடும்பங்களையும் சென்றடைய வேண்டும் என்று ராஷ்டிரிய சுயம்சேவ சங்கம் (RSS) முடிவு செய்திருந்தது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News