Kathir News
Begin typing your search above and press return to search.

வெளிநாட்டுல நிதி வாங்கினா இங்கு போராட கூடாது.. சாட்டையை சுழற்றிய மத்திய அரசு.!

வெளிநாட்டுல நிதி வாங்கினா இங்கு போராட கூடாது.. சாட்டையை சுழற்றிய மத்திய அரசு.!

வெளிநாட்டுல நிதி வாங்கினா இங்கு போராட கூடாது.. சாட்டையை சுழற்றிய மத்திய அரசு.!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  12 Nov 2020 5:01 PM IST

வெளிநாடுகளில் நிதி உதவி பெறும் இந்தியாவை சேர்ந்த தன்னார்வலர்கள், சேவை அமைப்புகளுக்கான மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்தியாவில் வெளிநாடுகளில் இருந்து நிதி உதவி பெற்று பல்வேறு துறைகளில் சேவை செய்யும் தன்னார்வ நிறுவனங்கள் நாடு முழுவதும் பல உள்ளன.

இந்நிலையில் பல காலமாக இதுபோன்ற தன்னார்வல சேவை அமைப்புகள் வெளிநாடுகளில் உள்ள அமைப்புகளிடம் நிதி உதவி பெற்று உள்நாட்டில் பல்வேறு விதமான போராட்டங்களை தூண்டி விடுவதாக உளவுத்துறைக்கு தகவல்கள் சென்றது.

இதனிடையே, வெளிநாடுகளில் நிதி பெறும் தன்னார்வ அமைப்புகளுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி வெளிநாட்டிலிருந்து நிதி பெரும் உள்நாட்டு தன்னார்வ அமைப்புகள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடக்கூடாது. மேலும் அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகளில் கலந்து கொள்ளும் விவசாயிகள் மற்றும் மாணவர் நல அமைப்புகள் வெளிநாட்டு நிதியை பெற முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் வாழ்ந்து கொண்டு இந்தியாவிற்கு எதிராகவே போராட்டம் நடத்துபவர்களுக்கு இது ஒரு சாட்டையடி என்று பலர் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News