Kathir News
Begin typing your search above and press return to search.

இனி குழந்தைகளுக்கு தலை கவசம் கட்டாயம் - வளர்ந்த நாடுகளுக்கு இணையாக அதிகரிக்கும் கட்டுப்பாடு!

Draft rules for safety provisions for a child carried on a motor cycle

இனி குழந்தைகளுக்கு தலை கவசம் கட்டாயம் - வளர்ந்த நாடுகளுக்கு இணையாக அதிகரிக்கும் கட்டுப்பாடு!

MuruganandhamBy : Muruganandham

  |  26 Oct 2021 5:20 PM GMT

வளர்ந்த நாடுகளில் உள்ளதைப்போல இனி குழந்தைகளுக்கு தலை கவசம் கட்டாயம் என்ற விதி நடைமுறைக்கு வரவுள்ளது. இருசக்கர வாகனத்தில் அழைத்து செல்லப்படும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கான வரைவு விதிகள் வெளியிடப்பட்டுள்ளன.

இருசக்கர வாகனங்களில் குழந்தைகளுடன் பயணம் செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து மோட்டார் வாகன சட்டத்தின் பிரிவு 129திருத்தப்பட்டுள்ளது. இப்பிரிவில் உள்ள இரண்டாவது விதியின் படி, மோட்டார் சைக்கிளில் செல்லும் நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பாதுகாப்பிற்கான நடவடிக்கைகளை விதிகளின் மூலம் மத்திய அரசு எடுக்கலாம்.

GSR 758(E) விதியின் படி வரைவு விதிகளை உருவாக்கியுள்ள சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம், கீழ்கண்டவாறு பரிந்துரைத்துள்ளது:

இருசக்கர வாகனத்தில் செல்லும் நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளை மோட்டார் சைக்கிள் ஓட்டுபவரிடம் இணைக்க பாதுகாப்பு சேணம் பயன்படுத்தப்படும்.

பின்னால் அமர்ந்து செல்லும் 9 மாதங்கள் முதல் 4 வயது வரையிலான குழந்தைகள் தலை கவசம் அணிந்திருப்பதை ஓட்டுநர் உறுதி செய்ய வேண்டும். பிஐஎஸ்-ஆல் பரிந்துரைக்கப்பட்ட அம்சங்கள் கொண்ட தலை கவசங்கள் பயன்படுத்தப்பட வேண்டும்.

4 வயதுக்குட்பட்ட குழந்தையுடன் செல்லும் மோட்டார் சைக்கிளின் வேகம் மணிக்கு 40 கிமீக்கு மேல் இருக்கக்கூடாது.

சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளது.



1) இருசக்கர வாகனத்தில் செல்லும் நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளை மோட்டார் சைக்கிள் ஓட்டுபவரிடம் இணைக்க பாதுகாப்பு சேணம் பயன்படுத்தப்படும்.


2) பின்னால் அமர்ந்து செல்லும் 9 மாதங்கள் முதல் 4 வயது வரையிலான குழந்தைகள் தலை கவசம் அணிந்திருப்பதை ஓட்டுநர் உறுதி செய்ய வேண்டும். பிஐஎஸ்-ஆல் பரிந்துரைக்கப்பட்ட அம்சங்கள் கொண்ட தலை கவசங்கள் பயன்படுத்தப்பட வேண்டும்.


3) 4 வயதுக்குட்பட்ட குழந்தையுடன் செல்லும் மோட்டார் சைக்கிளின் வேகம் மணிக்கு 40 கிமீக்கு மேல் இருக்கக்கூடாது.


இவ்வாறு சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.








Next Story
கதிர் தொகுப்பு
Trending News