Kathir News
Begin typing your search above and press return to search.

DRDO அசத்தல்! இந்தியாவில் தயாரிக்கப்பட்ட புதிய ஆகாஷ்-என்ஜி ஏவுகணையின் சோதனை வெற்றி!

DRDO அசத்தல்! இந்தியாவில் தயாரிக்கப்பட்ட புதிய ஆகாஷ்-என்ஜி ஏவுகணையின் சோதனை வெற்றி!

ParthasarathyBy : Parthasarathy

  |  22 July 2021 7:21 AM GMT

DRDO அமைப்பு, நேற்று ஒடிசாவின் கடற்கரையில் புதிய தலைமுறை ஆகாஷ் (Akash-NG) நவீன ஏவுகணையின் சோதனையை நடத்தியது. இந்த ஆகாஷ் ஏவுகணை முழுக்க முழுக்க நமது இந்திய நாட்டில் தயாரிக்கப்பட்டது, அது மட்டுமின்றி இந்த ஏவுகணை கூடிய விரைவில் இந்திய விமானப்படையில் சேர்க்கப்படவுள்ளது.

மேலும் இந்த ஆகாஷ் ஏவுகணையின் சோதனை குறித்து DRDO வெளியிட்டுள்ள அறிக்கையில் "தரையில் இருந்து வான் இலக்குகளை தாக்கக்கூடிய புதிய தலைமுறை ஆகாஷ்-என்ஜி ஏவுகணையை ஒடிசா கடற்கரைக்கு அருகில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை தளத்தில் DRDO நேற்று வெற்றிகரமாக சோதனை செய்தது. பன்நோக்கு ரேடார், உத்தரவு, கட்டுப்பாடு மற்றும் தகவல் தொடர்பு அமைப்பு உள்ளிட்ட ஆயுத அமைப்புரீதியான அனைத்து உபகரணங்களுடன் தரைதளத்தில் இருந்து பிற்பகல் 12.45 மணியளவில் இந்த சோதனை நடத்தப்பட்டது.


ஹைதராபாத்தில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆயவகம் மற்றும் DRDO வின் ஆய்வகங்கள் இருவரும் இணைந்து இந்த ஏவுகணையை தயாரித்துள்ளனர். வான் ரீதியான அச்சுறுத்தல்களை வெற்றிகரமாக எதிர்கொள்ளும் திறனை இந்த ஏவுகணை வெளிப்படுத்தியது. மேலும் கூடிய விரைவில் இந்திய விமானப்படையில் இந்த ஏவுகணை இணைக்கப்படவுள்ளன. இந்த புதிய ஆகாஷ் ஏவுகணை இந்திய விமானப்படைக்கு மேலும் வலுசேர்க்கும்." என்று அதில் கூறி இருந்தது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News