வளர்ந்து வரும் நாடுகள் மட்டுமே பயன்படுத்தும் விண்வெளி உலோகத்தை இந்தியாவில் தயாரித்த டி.ஆர்.டி.ஓ.!
தொழிற்துறை பயன்பாட்டுக்கான அதிக சக்தி வாய்ந்த பீட்டா டைட்டானியம் கலவை உலோக பாகத்தை இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் உருவாக்கியுள்ளது. வளர்ந்து வரும் நாடுகள் மட்டுமே பயன்படுத்தி வரும் இந்த உலோகத்தை தற்போது டிஆர்டிஓ உள்நாட்டில் தயாரித்துள்ளது. இதில் வனடியம், இரும்பு மற்றும் அலுமினியம் உள்ளது.
By : Thangavelu

விண்வெளி பயன்பாட்டுக்கான இந்த உலோக பாகத்தின் ரசாயண குறியீடு Ti-10V-2Fe-3Al. இதை ஐதராபாத்தில் உள்ள டிஆர்டிஓ-வின் பாதுகாப்பு உலோகவியல் ஆராய்ச்சி ஆய்வகம் (DMRL) உருவாக்கியுள்ளது. இரும்பை விட எடை குறைந்த இவ்வுலோகம் வலிமை மிக்கது. விண்வெளி பயன்பாட்டுப் பொருட்களைத் தயாரிக்க எடை குறைந்த உலோகம் பயன்படுத்தப்படும். அவ்வகையில் இந்த உலோகம் உள்நாட்டு விண்வெளி சார்ந்த பொருட்கள் தயாரிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும்.
சாதாரணமாக தயாரிக்கப்படும் உலோகக் கலவையில், உலோகத்தின் எடையை குறைக்க பீட்டா டைட்டானியம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.