குடிக்கும் பால், தண்ணீரில் கலப்படம்.. ஆந்திர மர்ம நோய்க்கு இதுதான் காரணமாம்.?
குடிக்கும் பால், தண்ணீரில் கலப்படம்.. ஆந்திர மர்ம நோய்க்கு இதுதான் காரணமாம்.?

ஆந்திர மாநிலம், கோதாவரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாக 500க்கும் மேற்பட்டவர்கள் திடீரென்று மயக்கம் போட்டு கீழே விழுந்தனர். இது ஆந்திரா மட்டுமின்றி ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சியடைய செய்தது. இதனிடையே மர்ம நோய்க்கான காரணம் பற்றி முதற்கட்ட பரிசோதனை வெளிவந்துள்ளது.
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரியை அடுத்த ஏலூர் உள்ளிட்ட கிராமங்களில் சில நாட்களுக்கு முன் 100க்கும் மேற்பட்டவர்கள் மக்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டனர். அடுத்தடுத்து மக்கள் உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனைகளில் தொடர்ந்து அனுமதிக்கப்பட்டனர்.
இதனால் மக்களிடையே மர்ம நோய் பரவியதாக கூறப்பட்டு வருகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குமட்டல், வாந்தி, நினைவிழப்பு வரை பாதிப்பு இருந்தது. இவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. யாருக்கும் எந்த தொற்றும் இல்லை என்பது தெரியவந்தது.
மேலும், பாதிக்கப்பட்டவர்களின் ரத்த மாதிரிகளும் எடுக்கப்பட்டது. அதில் எந்த வைரஸ் எதுவும் இல்லை என்று முடிவுகள் வந்தது. உடல் நலம் பாதித்தவர்களை அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் பாதிக்கப்பட்வர்களின் நோய்களுக்கான காரணம் பற்றி விசாரிக்க மருத்துவ குழுக்களை அமைத்து உத்தரவிட்டார்.
ஒருவர் உயிழந்த நிலையில், இரண்டு நாட்களில் 500க்கும் அதிகமானோர்கள் மருத்துவமனைகளில் மீண்டும் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சையில் இருந்து குணமடைந்து 370 பேர் வீடு திரும்பினர். அதில் 20 பேரின் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாததால் அவர்கள் குண்டூர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
இந்நிலையில், மர்ம நோய் எப்படி பரவியது என்பதை கண்டறிய டெல்லி எய்ம்ஸ் மருத்துவக்குழு ஏலூர் விரைந்தது. இந்த குழு அப்பகுதியில் கள ஆய்வு நடத்தியதுடன், பாதிக்கப்பட்ட மக்களின் ரத்த மாதிரிகள் சோதனை செய்யப்பட்டது. மேலும், அருகாமையில் உள்ள 30 கிராமங்களில் தண்ணீர், மற்றும் பால் மாதரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. அதே போன்று தண்ணீர் தொட்டிகள் அனைத்தும் சுத்தம் செய்து மருந்து அடிக்கப்பட்டது.
இந்நிலையில், பரிசோதனை வெளிவந்தது. அதில் கிராம மக்கள் பயன்படுத்திய பால் மற்றும் தண்ணீரில் ஈயம் போன்ற ரசாயனம் கலப்படம் இருப்பது தெரியவந்துள்ளது. இது எப்படி நடந்தது என தீவிரமாக மருத்துவக்குழு ஆராய்ந்து வருகிறது.