Kathir News
Begin typing your search above and press return to search.

இந்திய கம்யூனிஸ்ட் பிரமுகருக்கு சொந்தமான விடுதியில் போதை விருந்து! நடிகைகளுக்கும் தொடர்பு அம்பலம்!

இந்திய கம்யூனிஸ்ட் பிரமுகருக்கு சொந்தமான விடுதியில் போதை விருந்து! நடிகைகளுக்கும் தொடர்பு அம்பலம்!

இந்திய கம்யூனிஸ்ட் பிரமுகருக்கு சொந்தமான விடுதியில் போதை விருந்து! நடிகைகளுக்கும் தொடர்பு அம்பலம்!

Muruganandham MBy : Muruganandham M

  |  26 Dec 2020 7:30 AM GMT

கேரளாவில் இந்திய கம்யூனிஸ்ட் பிரமுகருக்கு சொந்தமான விடுதி சார்பில் வெளியான அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் புத்தாண்டு கொண்டாட்டங்களும் களைகட்டி வருகிறது. பல இடங்களில் ஹோட்டல்கள் மறைமுகமாக பார்ட்டிகளுக்கு தயாராகி வருகின்றன. இடுக்கி மாவட்டம் வாகமனில் உள்ள கிலிஃப் இன் என்ற உல்லாச விடுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஷாஜி என்பவருக்கு சொந்தமானது. இதில் இரு நாட்களுக்கு முன் மது, போதை பொருட்களுடன் விருந்து நடந்துள்ளது.

இது குறித்து போலீஸாருக்கு தகவல் கிடைத்ததும், சம்பந்தப்பட்ட விடுதிக்கு அதிரடியாக புகுந்து போலீசார் சோதனை நடத்தினர். அங்கு விதவிதமான போதைப் பொருட்களுடன் மது விருந்து நடந்தது உறுதியானது. இதையடுத்து, 60 பேரை கைது செய்தனர். இதில், 26 பேர் இளம் பெண்களும் அடங்குவர்.

போதை விருந்தை நடத்த எர்ணாகுளத்தைச் சேர்ந்த 9 பேர் ஒருங்கிணைத்துள்ளனர். சமூக ஊடகங்களில் பதிவிட்ட அறிவிப்பில், "எதற்குமே எல்லை கிடையாது. எவ்வளவு வேண்டுமானாலும் குடிக்கலாம். வரம்பு இல்லை என குறிப்பிட்டுள்ளனர்.

அறிவிப்பை பார்த்து பலரும் வாகமன் சென்றனர். தற்போது விடுதியை புக் செய்த 9 பேரும் கைது செய்யப்பட்டனர். பெருமளவு பணம் கொடுத்து இளைஞர்களும், இளம் பெண்களும் இந்த போதை விருந்தில் கலந்து கொண்டது தெரிய வந்தது.

தொடுபுழாவைச் சேர்ந்த அஜ்மல் நஷீர் இந்த பார்ட்டிக்கு போதை மருந்துகளை சப்ளை செய்தது தெரிய வந்தது. மலையாள நடிகை பிரிஸ்டி பிஸ்வாசும் இந்த வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

பார்ட்டி நடத்த விடுதி வழங்கிய ஷாஜி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். தனக்கு விடுதி உள்ளே நடந்த விஷயம் குறித்து எதுவும் தெரியாது என்று ஷாஜி விளக்கமளித்தாலும் கட்சித் தலைமை ஏற்கவில்லை.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News