புதிய வைரஸ் எதிரொலி.. பிரிட்டனில் இருந்து வந்தவர்களுக்கு கட்டாய தனிமை.!
புதிய வைரஸ் எதிரொலி.. பிரிட்டனில் இருந்து வந்தவர்களுக்கு கட்டாய தனிமை.!

இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவது அந்த நாட்டு மக்களை மீண்டும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில், வைரஸ் பரவல் காரணமாக வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள தலைநகர் லண்டன், கிழக்கு மற்றும் தென்கிழக்கு பகுதிகளில் மீண்டும் முழு ஊரடங்கு அமலுக்கு வருவதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.
அதேபோன்று, பிரிட்டனில் இருந்து வரும் விமானங்களுக்கு பல ஐரோப்பிய நாடுகள் தடை விதித்தன. இதனையடுத்து, இந்தியாவும் பிரிட்டன் விமானங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், இங்கிலாந்து நாட்டில் இருந்து மும்பைக்கு விமானத்தில் வந்திறங்கிய பயணிகளை அழைத்து செல்வதற்காக அவர்களது உறவினர்கள் வந்திருந்தனர். ஆனால், விமான பயணிகளை கட்டாய தனிமைப்படுத்துதலுக்காக அதிகாரிகள் அழைத்து சென்றனர். இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.