அறக்கட்டளை பெயரில் மக்களிடம் பணம் வசூலித்து மோசடி - பெண் பத்திரிகையாளரின் ரூ.1.77 கோடி முடக்கம்!

By : Kathir Webdesk
பத்திரிகையாளர் ராணா அயூப் நிவாரணப் பணிகளுக்கு மக்களிடம் இருந்து ஆன்லைன் தளம் மூலம் நிதி திரட்டினார். ஆனால், இந்த நிதியை நிவாரணப் பணிகளுக்கு இவர் முழுமையாக பயன்படுத்தவில்லை.
நிவாரண நிதிக்கு ரூ.74.50 லட்சம் அனுப்பி உள்ளார். பிறகு ரூ.50 லட்சத்தை அவரது வங்கிக் கணக்கில் நிரந்தர வைப்பு தொகையாக மாற்றியுள்ளார். வங்கியில் நடப்பு கணக்கை தொடங்கி, அதில் அறக்கட்டளைக்கு வசூலித்த நிதியை மாற்றியுள்ளார். 3 வங்கிக் கணக்குகளில் இவர் அறக்கட்டளை பணத்தை சேமித்து வைத்துள்ளார்.
இவர் மீது இந்திய தண்டனை சட்டம், ஐ.டி. சட்டம், கருப்பு பணம் சட்டம் ஆகியவற்றின் பல பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதன் அடிப்படையில் அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்தது. இவரது 3 வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ.1,77,27,704 மற்றும் நிரந்தர வைப்பு நிதி ரூ.50 லட்சத்துக்கு கிடைத்த வட்டித் தொகை ஆகியவற்றை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
மும்பையில் பிறந்த ராணா அயூப், தி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் கட்டுரைகள் எழுதியுள்ளார். குஜராத் ஃபைல்ஸ் என்ற புத்தகத்தையும் எழுதியிருக்கிறார். மத்திய அரசுக்கு எதிராக கட்டுரை வெளியிடும் தளங்களுக்கு தொடர்ந்து எழுதி வந்தவர்.
Input From: The Hindu
