111 அரசியல் கட்சிகளின் பதிவு ரத்து - இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி !
By : Thangavelu
நாட்டில் அங்கீகரிக்கப்படாத 111 அரசியல் கட்சிகளின் பதிவை தேர்தல் ஆணையம் அதிரடியாக ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த அரசியல் கட்சிகளை நேரில் சென்று பதிவு செய்யப்பட்ட முகவரி உள்ளிட்ட பல்வேறு தகவல்களை சரிபார்க்கின்ற நடவடிக்கையில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டது. அதன்படி 111 கட்சிகள் இயங்காமல் விதிமுறைகளுக்கு மாற்றாக இருப்பது தெரியவந்தது.
அது மட்டுமின்றி மூன்று கட்சிகள் நிதி முறைகேட்டிலும் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து இந்திய தேர்தல் சட்டத்தின் அடிப்படையில் மேற்கண்ட 111 அங்கீகரிக்கப்படாத கட்சிகளின் பதிவை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. இதற்கான சீரமைப்பு நடவடிக்கைகள் கடந்த மே 25ம் தேதி தொடங்கியதாகக் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. புதிதாக பொறுப்பேற்ற இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இதனை அனைத்தும் செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Source: Polimer
Image Courtesy:Times Of India