Kathir News
Begin typing your search above and press return to search.

மத்திய அரசின் ஃபாஸ்ட்டாக் திட்டம் - மின்னணு சுங்க வசூல் 46% அதிகரிப்பு!

2022-ல் ஃபாஸ்ட்டாக் மூலம் மின்னணு சுங்க வசூல் 46% அதிகரித்து வருகிறது.

மத்திய அரசின் ஃபாஸ்ட்டாக் திட்டம் - மின்னணு சுங்க வசூல் 46% அதிகரிப்பு!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  26 Jan 2023 2:25 AM GMT

கடந்த சில ஆண்டுகளாக ஃபாஸ்ட்டாக் மூலம் மின்னணு சுங்கச்சாவடி வசூல் நிலையான வளர்ச்சியை கண்டு வருகிறது. 2022 ஆம் ஆண்டில் மாநில நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகள் உட்பட ஃபாஸ்ட்டாக் மூலம் மொத்த சுங்க வசூல் ரூ.50,855 கோடியாக இருந்தது. இது 2021 ஆம் ஆண்டின் ரூ.34,778 கோடியுடன் ஒப்பிடுகையில் சுமார் 46 சதவீதம் அதிகமாகும்.


2022 டிசம்பர் மாதத்தில் நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்ட்டாக் மூலம் வசூலான தினசரி சராசரி ரூ.134.44 கோடியாகும். டிசம்பர் 24-ந் தேதி மிக அதிகபட்சமாக ஒரே நாளில் ரூ.144.19 கோடி வசூலாகியிருந்தது. இதேபோல ஃபாஸ்ட்டாக் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையும் 2022 ஆம் ஆண்டில் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் சுமார் 48 சதவீதம் வளர்ச்சியை கண்டுள்ளது. 2021 ஆம் ஆண்டில் ஃபாஸ்ட்டாக் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 219 கோடியாகவும், 2022-ல் 324 கோடியாகவும் இருந்தது.


இதுவரை 6.4 கோடி ஃபாஸ்ட்டாக்குகள் வழங்கப்பட்டுள்ளன. 2022-ல் நாடு முழுவதும் ஃபாஸ்ட்டாக்குகள் பயன்பாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கை 1181 ஆகும். 2021-ல் இது 922 ஆக இருந்தது. ஃபாஸ்ட்டாக் திட்டத்தின் கீழ் மாநில சுங்கச்சாவடிகள் செயல்படுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் 29 மாநில நிறுவனங்கள் மற்றும் ஆணையங்களுடன் செய்து கொள்ளப்பட்டுள்ளன.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News